தமிழ் காக்க

அறம் காத்த நல்லோர்
வாழ் திருநாட்டில்
புறம் காக்கும் வல்லோர்
தாழ் நோக்க கண்டோம்
தமிழ் தேங்கும் நன்னாட்டில்
வேல் கொண்டு விதைத்திட
மொழிகள் சில விரைந்திட
புகுத்திட மனதில்லையே

தோள் கொண்ட வீரர்கள்
புடைசூழ நம் மொழி காக்க
தமிழ் கரம் கொண்டு
வெகுண்டெழுந்து முன்னோக்க
தமிழன் படையெனும் தேர் கண்டு
புறம் காண செய் தமிழா

தரம் யாதென்றும் தமிழ்நாட்டின்
தமிழ் தந்த வரம் தாங்கும்
எம்மவரின் பலம் ஏது குலம் ஏது
உணர்த்திடு உரைத்திடு
வினாக்கள் பல வினைகள் பல
விரைந்தாலும்
விளக்கிட விலக்கிட முனைந்திடு தமிழா

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Aug-17, 11:12 am)
Tanglish : thamizh kaakka
பார்வை : 195

மேலே