இமைகள் பறித்து உறங்கச் சொல்கிறாள்
இமைகள் பறித்து உறங்கச் சொல்கிறாள் !
உள்ளம் முழுதும் உந்தன் நினைவு .
வெள்ளம் போலே விரைந்துப் பாய்ந்துத்
தத்தித் தவிக்குது தத்தை உன்னிடம் .
மொத்தமாய் நீயும் முழுமையாய் ஆட்கொள் !
இமைகள் பறித்து உறங்கச் சொல்கிறாள் !
உத்தமன் எழுதிய உருவகக் கவியே !!
நிலவே ! வருவாய் ! நிதமும் என்னருகே !
உலவும் போதும், உன்றனின் நினைவே !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்