என் காதலனின் பிறந்தநாள்

பிரியமான
என் முதல் பிள்ளைக்கு,
இன்று உன்னுடைய
பிறந்தநாள்!

உன்னை கட்டி அணைத்து
நெற்றியில் முத்தமிட்டு
என் வாழ்த்துக்களை கூற
வழி இல்லை....

அலைபேசியில் அழைத்து
என் வாழ்த்தினை சொல்லி
பதிலுக்கு நீ கொடுக்கும்
முத்தத்தை பெற
வாய்ப்பில்லை....

நீ என்னிடம்
விரும்பி கேட்கும்
பரிசுக்கும்,
நான் வளிய
கொடுக்கும் பரிசுக்கும்
வேலையில்லாமல்
போனது.....

காதலென்னும் உறவில்
என் உயிரோடு
கலந்தவன் நீ,
நீ எங்கு இருந்தாலும்
என் நினைவலைகள்
உனக்கு வேலியாகும்....

இனி உன் ஏக்கங்கள்
எல்லாம் விலகி
உன் எதிர்பார்ப்புக்கள்
நிறைவேறட்டும்....

நீ இழந்தில்
கடைசி இழப்பு
நானாக இருக்கட்டும்...

என் கடைசி நிமிட
மூச்சுக்காற்றும்
உன்னை தொட்டு
உரச ஏங்கிக்கொண்டிருக்கும்.......

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (30-Aug-17, 10:23 am)
பார்வை : 3421

மேலே