முதல் தோழன் ..

சிரிக்க மறந்த நேரங்களை சரியாய் அறிந்து சிரிக்க வைத்தாய் ...
கலங்கி நின்ற நொடிகளில் தாயாய் இருந்து அரவணைத்தாய் ....
தோல்விகளில் முதல் ஆறுதலாகவும்
வெற்றிகளில் முதல் வாழ்த்தாகவும் என்றும் நீ ..
முகவரியின்றி இருந்த எனக்கு
முகம் கொடுத்த முதல் தோழன் நீ ...