நாடு அதை நாடு

சின்ன பத்திக்குள் அடங்காது
செல்வகணேசனின் பெருமை...
அவனது மனப்பாங்கு
அவனது கையெழுத்துப்
போன்றே மிக அழகானது...

இன்று பேராசிரியனாய்
அவனிடமுள்ள முதிர்ச்சி
அன்றே கல்லூரி மாணவனாய்
இருந்தபோதும் இருந்தது...

அரசு வேலைக்கு
நிறையபேர் தவமிருந்த
காலத்தில் இவன்
அரசு பொறியாளராய்
பணியாற்றியபோதும்
திறமைகளின் விசாலத்தில்
வேலைகளின் விலாசம்
மாற்றியவன்...

முனைவராய் கல்வியில்
உயர்ந்தான்... மாணவர்
அனைவரையும் கற்பித்தலில்
கவர்ந்தான்...

மேற்படிப்புக்குச் சென்று
பணிபுரிந்தது மலேசிய
வெளிநாடு...
அதிக ஊதியம் புறந்தள்ளி
அர்த்தத்தோடு ஊர்திரும்பி
இனிதாய் பணிபுரிவது
இந்தியத் தாய்நாடு.. அதிலும்
இனிய தமிழ்நாடு...
எல்லோர்க்கும் சொல்வேன்
இதையே நீ நாடு...

செல்வகணேசன்... இவன்
முப்பத்தொன்று வருட
அனுபவம் கொண்ட
இருபத்தொன்று வயது
இளைஞனாகவே தெரிகிறான்
இந்த ஐம்பத்திரெண்டிலும்...

பாளையங்கோட்டை கொண்ட
திருநெல்வேலியில் பிறந்து
மலைக்கோட்டை கொண்ட
திருச்சிராப்பள்ளியில்
பணிபுரிந்து வரும்
செல்வகணேசனின்
மனக்கோட்டையில்
உதிக்கும் எண்ணமெல்லாம்
செயல் வடிவம் பெற்று
வளமோடும் நலமோடும்
நீடூழி வாழ்க! வாழ்க!!
செல்வகணேசன்
உனக்கு எனதினிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍🙏😀🙋🏻‍♂🎂🍇🍎🍏🌹🌷🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (7-Sep-17, 1:07 pm)
Tanglish : naadu athai naadu
பார்வை : 117

மேலே