உங்களுக்கான விலை என்ன

இன்பத்தைப் பங்கிடுபவர்கள் துன்பத்தில் துணை வருவதில்லை...
துன்பத்தில் துணை வந்தவர்கள் இன்பத்தில் பங்கு கேட்பதில்லை...
எது சந்தோஷம் என்று தேடிபார்க்கிறேன்?!

தன்னுடலை விற்பது போல் வியாபார உலகம்,
எல்லாவற்றையும் விற்கிறது...
காசே தான் கடவுளப்பா.
இது கடவுளுக்கும் தெரியுமப்பா..
என்ற வரிகளின் கருத்தே இந்த உலகமெங்கும் எதிரொலிக்கிறது ஒவ்வொரு மனிதரிலும்...

அறிவுக்கொரு விலை...
அன்புக்கொரு விலை...
கருணைக்கொரு விலை...
அந்தக் கடவுளுக்கொரு விலை...

உண்மைக்கொரு விலை...
நீதிக்கொரு விலை...
வாழ்க்கைக்கொரு விலை...
ஞானத்திற்கொரு விலை...

இங்கு அரசாங்கங்கள் வழங்கிடும் உயிர்க்கொரு விலை...
சந்தோஷச் சுற்றுலாவிற்கொரு விலை...
அழகிற்கொரு விலை...
இறந்த பிணத்தை நல்லடக்கம் செய்வதற்கொரு விலை...

எங்கும் ஒலிக்கிறது என்ன விலை? என்ன விலை? என்று...
ஆதலால், ஆனது சோலைவன உலகம் பாலை வனமாய்...

இப்போது படிக்கிறேன்.
பின்னாடி படிப்புக்கேற்ற வேலைக்கு போய் அதிகமாகச் சம்பாதிக்காவிடில் இந்த உலகம் பறைசாட்டும் நான் திறமையற்றவனென்று...
ஆக திறமைக்குமொரு விலையுண்டு இவ்வுலகில்...

எனக்கான விலை ஒரு முடிவிலி...
உங்களுக்கான விலை என்ன?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Sep-17, 10:34 am)
பார்வை : 1073

மேலே