என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 39

"இல்ல டி, எனக்கு ஒண்ணுமே புரியல. அது இருக்கட்டும், நீ எதுக்கு அன்னிக்கு பொய் சொன்ன, நீ என்கிட்டே சொல்லாம அவங்கள எதுக்கு மீட் பண்ணின?" என்றாள் விஜி.

"பாரு விஜி, ஸ்டில் நீ என்னை தப்பு சொல்றதுல தான் இருக்க, ஆனா நீ பண்ணின தப்ப உணர மறுக்கறியே" என்றாள் காயத்ரி.

"இல்ல டி..நான் என்ன சொல்றேன் னா..." என்றாள் விஜி.

"நீ எதுவும் சொல்ல வேணாம் விஜி, ப்ளீஸ் எனக்காக நீ உன்னோட கோவம் உன்னோட இந்த செலக்டிவ் பெர்செப்ஷன் உன்னோட இந்த குறுகிய வட்டத்தை விட்டு வெளில வா டி" என்றாள் காயத்ரி.

"அது சரி காயத்ரி, அவனை நான் அன்னிக்கு அப்டி பேசினதுக்கு அப்புறம் நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன் னு அவன் திரும்பி கொஞ்ச நேரத்துல எனக்கு போன் பண்ணிருக்கலாம் இல்ல, ஆனா அன்னிலேந்து இன்னிவரைக்கும் என்கிட்டே பேசவே இல்ல. அவன் மட்டும் இல்ல, யாருமே பேசல தெரியும் இல்ல உனக்கு" என்று தவறுக்கு சப்பை கட்டு கட்ட முயன்றாள் விஜி.

"விஜி, அது எப்படி, நீ சொன்ன வார்த்தை அப்டி, உன்னோட சந்தோசம் முக்கியம் னா உன்கூட பேசக்கூடாதுன்னு சொன்ன, ஆமாம் அதான் அவங்க உன் சந்தோசம் முக்கியம் னு உன்கூட பேசல, இவ்ளோ ஏன், நீ அன்னிக்கு அப்டி பேசிட்டு வெச்சதும் பிரவீன் பைக் ல இருந்து பாலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்து மூஞ்சி கை கால் எல்லாம் ஒரே காயம், அதைக்கூட உன்கிட்ட சொல்லக்கூடாது, ஏன் னா உன்கிட்ட இருந்து சிம்பதி வரக்கூடாதுன்னு நெனச்சான்" என்றாள் காயத்ரி.

"என்ன டி, உனக்கு எல்லாம் எப்படி தெரியும்" என்றாள் விஜி.

"அன்னிக்கு விழுப்புரத்துல நடந்ததை தான் சொன்னேனே, பிரவீன் காணும் னு தெரிஞ்சதும் முபாரக் அண்ணா ப்ரவீனுக்கு ஒன்னும் ஆகாம வந்துட்டான் னா பிரவீன் காணாமல் போய் தவிக்க வாய்த்த அந்த கார வித்து அந்த காச அனாதை ஆஸ்ரமத்துக்கு தரேன் னு சொன்னாரு, அதே மாதிரி அந்த கார வித்துட்டாரு தெரியுமா?" என்றாள் காயத்ரி.

விஜி மோனமாய் இருந்தாள்.

"என்ன டி, பேசு, இவ்ளோ ஏன், நீ இப்டி ஆடிட்டுடா ரூடா பேசினதை பத்தி அவங்க பெருசா எடுத்துக்கவே இல்ல, நீ ஒரு குழந்தை மாதிரி, எதையும் மனசுல வெச்சுக்காம வெச்சுக்க தெரியாம வெளிப்படையா பேசற விஜி கண்டிப்பா நல்ல மனசு வெள்ளை மனசு பிள்ளை மனசு அப்டி இப்படின்னு உன்னை பெருமையா தான் பேசறாங்க" என்றாள் காயத்ரி.

"காயத்ரி....நிஜமாவா டி சொல்ற" என்றாள் விஜி.

"இப்போ நீ என்னையும் நம்பாதவங்க லிஸ்ட் ல செத்துட்டியா டி, உன்கிட்ட நான் எதுக்கு பொய் சொல்லணும்" என்றாள் காயத்ரி.

"ஐயோ, எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் விஜி.

"ஈவென் நர்கீஸ் அக்கா கூட உன்னை எப்படி பெருமையா நினைக்கிறாங்க டி" என்றாள் காயத்ரி.

"அது சரி, நான் தான் அவங்கள கோவமா பேசினான், ஆனா அன்னிக்கு நீ அவங்களுக்கு போன் பண்ணினப்போ எதுக்கு வீட்ல இருந்துகிட்டே அடுத்தவங்க கிட்ட போன் குடுத்துட்டு அவங்கள வெச்சு வீட்ல இல்லன்னு சொல்ல சொன்னாங்க" என்றாள் விஜி.

"யாரு...அவங்க அன்னிக்கு நெஜமாவே வீட்ல இல்ல தான்,எங்க இருந்தாங்க தெரியுமா" என்றாள் காயத்ரி.

"எங்க டி" என்றாள் விஜி.

"அதுக்கு முன்னாடி என்கூட நீ வா" என்றபடி தனியாக அழைத்து தொலைபேசியில் செந்திலை அழைத்தாள் காயத்ரி.

"ஏய் எதுக்கு இப்போ செந்தில் லு கால் பண்ற, அவன் தான் இன்னிக்கு வரலையே" என்றாள் விஜி.

"தெரியும், உனக்கு அவங்க அன்னிக்கு எங்க இருந்தாங்கன்னு ப்ரூவ் பண்றேன் இரு" என்று சொல்லும்போதே செந்தில் அட்டென்ட் செய்தான். போனை லௌட் ஸ்பீக்கரில் போட்டாள் காயத்ரி.

"சொல்லு காயத்ரி" என்றான்.

"சார், நீங்க எதுக்கு பொய் சொல்லி ரிசைன் பண்ணினீங்க, உங்களுக்கு உண்மையாவே வேலை கிடைக்கல தான" என்றாள் காயத்ரி.

மௌனமாய் இருந்தான் செந்தில்.

விஜிக்கு ஒன்றும் புரியாமல் நின்றாள்.

"சொல்லுங்க செந்தில் சார்" என்றாள் காயத்ரி.

"ஆமாம் காயத்ரி, எனக்கு வேலை கிடைக்கல தான்" என்றான் செந்தில்.

"அப்புறம் எதுக்கு ரிசைன் பண்ணினீங்க" என்றாள் காயத்ரி.

"இல்ல, உன்கிட்ட சொன்னா..." என்றான் செந்தில்.

"என்ன சொன்னா.....திருநெல்வேலி ல உங்க பேமிலிக்கு ஏதாவது பிரச்சனை ஆகிடுமா" என்றாள் காயத்ரி.

விஜி திகைப்பாக பார்த்தாள்.

"காயத்ரி...உனக்கு எப்படி எல்லாம் தெரியும், அவங்க உன்கிட்ட சொல்ல மாட்டோம் னு சொன்னாங்களே, நான் இப்டி உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதை அவங்க என் அம்மா தங்கை கிட்டயும் சொல்லல, ஆனா மிரட்டி தான் விட்டாங்க, அவங்க கிட்ட சொல்லி இருந்தா எங்க அம்மா முகத்துலயே நான் முழிக்க முடியாம போயிருக்கும். அன்னிக்கு உன்கிட்ட சாரி கேக்க சொல்லி எங்க வீட்லயும் இங்க என்கிட்டயும் ஒரே நேரத்துல எங்களை கார்னர் பண்ணிட்டாங்க, ரிசைன் பண்ணலேன்னா, வேற மாதிரி ஏதாவது பண்ணிடுவோம் னு மெரட்டினாங்க, வேற வழி இல்லாம தான்...." என்றான் செந்தில்.

"சார், இப்போ அவங்க சொன்னா நீங்க உங்க ரிசைன் வாபஸ் வாங்குவீங்களா" என்றாள் காயத்ரி.

"இல்ல, மாட்டேன், அவங்க கண்டிப்பா சொல்ல மாட்டாங்க, ஏன் னா நீ அவங்களோட தங்கையாம், எந்த அண்ணனும் தன்னோட தங்கைகிட்ட இப்டி நடந்துக்கிட்ட லெக்ச்சர்ரா மன்னிக்க மாட்டாங்க, அது மட்டும் இல்ல, இங்க என்னை மிரட்டி அடிச்சாங்க ரெண்டு பேரு, அவங்க உன்கிட்டயும் விஜிகிட்டயும் சாரி கேக்கணும் அதை அவங்க கேக்கணும் னு சொன்னாங்க, நான் அன்னிக்கு உங்க கிட்ட லெப் ல சாரி கேக்கும்போது அவங்க என் போன் லைன் ல தான் இருந்தாங்க, அவங்க ஈவன் காலேஜ் மெய்ன் கேட் கிட்ட தான் இருந்தாங்க" என்றான் செந்தில்.

"ஆனா ஒண்ணு சார், நீங்க நெஜமாவே என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிருக்கீங்க" என்றாள் காயத்ரி.

"என்னோட போனை கூட அதுனால அவங்க வாங்கி உன்னோட எல்லா மெஸேஜையும் டெலிட் பண்ணி என்னை அடிச்சுட்டாங்க இல்ல, அப்புறம் என்ன, உன்னோட முகத்துல முழுக்கவே எனக்கு இப்போ அசிங்கமா இருக்கு, ஒரு பொண்ணு கிட்ட அதுவும் சின்ன பொண்ணு கிட்ட அசிங்கபட்டுட்டேன், இனிமே இங்க யார் சொன்னாலும் இருக்க மாட்டேன்" என்றான் செந்தில்.

போனை கட் செய்தாள் காயத்ரி.

"இது என்ன தெரியுமா.....அந்த செந்தில் அவனா ரிசைன் பண்ணல, அவனுக்கு வேலை ஏதும் கிடைக்கல, அன்னிக்கு நாம போன் பண்ணும்போது முபாரக், விஜய் அண்ட் ரகு மூணு பேரும் திருநெல்வேலி ல இருந்தாங்க, அன்னிக்கு முபாரக் அண்ணா யார்கிட்டயோ ஹிந்தி ல பேசினாங்களே, அது அவரோட பிரென்ட்பா திருநெல்வேலி ல போலீஸ் ல இருக்காரு, அவங்க மூலமா அவனோட நும்பெற வெச்சு அவன் எந்த ஏரியா எல்லாம் கண்டுபிடிச்சு அவர்மூலமா அவங்க வீட்ல போய் மிரட்டி இருக்காங்க, அந்த சேம் டைம் ல இங்க ரியாஸ் அண்ணனும் ப்ரவீனும் தான் செந்திலை மெரட்டினது, இன்னிக்கு நான் என்னோட எல்லா மனக்கஷ்டத்துல இருந்து வெளில வந்ததுக்கு முழுக்க முழுக்க அவங்க தான் காரணம்.தெரிஞ்சுக்கோ" என்றாள் காயத்ரி.

அன்று முழுவதும் விஜி அமைதியாகவே இருந்தாள்.காயத்ரியுடன் கூட அதிகம் பேசவில்லை.

மாலை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது விஜய்யிடம் காயத்ரி, "விஜி, நீ ரொம்ப இன்பீரியரா பீல் பண்ணாத, நீ ஒரு வாட்டி பிரவீன் கூட பேசினா போதும், எல்லாம் சால்வ் ஆய்டும், இப்டி நீ அமைதியா இருக்கறத பாக்கறதுக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கு, உன்னை கஷ்டப்படுத்தனும் னு நான் இதை உன்கிட்ட சொல்லல, பட் நீ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்" என்றாள் காயத்ரி.

விஜி அப்போதும் மௌனமாய் இருந்தாள்.

"சரி விஜி, ஈவினிங் விழுப்புரம் வரியா இல்லையா" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், வரேன் காயத்ரி,......காயத்ரி......ரியலி சாரி" என்றாள் விஜி.

"எனக்கு எதுக்கு டி சாரி, முடிஞ்சா பிரவீன் கிட்ட ஒரு வாட்டி பேசு" என்றாள் காயத்ரி.

எந்த பதிலும் விஜியிடம் இருந்து வரவில்லை.

வீட்டில் சற்று முகம் வாடியே இருந்தாள் விஜி.

"அம்மா, காயத்ரி கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் கு போகணும் னு சொன்னா, நானும் போயிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு சற்று நேரத்தில் தயாரானாள் விஜி.

காயத்ரியிடம் இருந்து போன்,"விஜி ரெடியா, வா. நான் வெய்ட் பண்றேன்" என்றாள் காயத்ரி.

விழுப்புரம் பேருந்தில் அமர்ந்தும் விஜி அதே மௌனத்தில் லயித்து இருந்தாள்.

"விஜி, நீ இப்டி அமைதியா எதுக்கு இருக்க" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, கொஞ்சம் விடு என்னை, நானே கொஞ்ச நேரத்துல நார்மல் ஆயிடுவேன்' என்றாள் விஜி.

அதன்பிறகு காயத்ரியும் அதிகம் விஜியிடம் பேசிக்க வில்லை.

நர்கீஸுக்கு மெசேஜ் போட்டாள் காயத்ரி."அக்கா, பிளான் இஸ் பார் கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ்"

நர்கீஸ் பதிலுக்கு மெசேஜ் செய்தாள், "நான் ஆல்ரெடி ராகவன்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் கிட்ட இருக்கேன், சோ பிளான் அக்கார்டிங்கிலி, முபாரக் அண்ட் பிரவீன் வித் விஜய் ஆல்சோ ஹியர்".

"விஜி, மனசு சரி இல்ல உனக்கு, எனக்கும் ஒரு மாதிரி இருக்கு, பர்ஸ்ட் நாம ஏதாவது கோவிலுக்கு போகலாமா?" என்றாள் காயத்ரி.

"போலாம் டி அனால் எந்த கோவில்?" என்றாள் விஜி.

"ராகவன்பேட்டை ஆஞ்சநேயர் கோவில்??" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், ஓகே" என்றாள் விஜி.

"அக்கா, விஜி அக்ரீட் டு கம் டு டெம்பெல், ப்ளீஸ் கேர்புல்" என்று மெசேஜ் போட்டாள் காயத்ரி.

"நாங்க எப்படியாவது தூரத்துல வெய்ட் பண்ணி நீங்க உள்ள போய் டென் மினிட்ஸ் கழிச்சு வரோம் உள்ள" என்று பதில் அளித்தாள் நர்கீஸ்.

கோவிலை அடைந்தனர் விஜியும் காயத்ரியும்.

உட்கார்ந்து பேசத்தொடங்கினர் இருவரும்.

சற்று நேரத்தில் எதேச்சையாக வருவது போல் நர்கீஸ் முபாரக் இருவரும் ப்ரவீனயும் விஜயையும் கோவில்லு போகலாமா என்று கேட்டு கூட்டி வந்தனர்.

முதலில் நர்கீஸ் அவர்களை எதேச்சையாக பார்ப்பது போல "ஹாய் காயத்ரி, ஹாய் விஜி, இங்க என்ன பண்றீங்க, விழுப்புரம் வந்திருக்கீங்க, என்ன விஷயம், எனி ஸ்பெஷல் அக்கேஷனா?" என்றாள்.

அனால் முபாரக் பிரவீன் விஜய் மூவரும் சற்று தொலைவில் நின்றிருந்தனர், விஜி பிரவீனின் முகத்தை பார்த்தாள், சிறு சிறு காயங்கள், கையில் சில பேன்டேஜுகள், கால் மூன்று விரல்களை சேர்த்து ஒரு சிறிய கட்டு என்று இருந்தான்.

அனால் பிரவீன் விஜய் முபாரக் மூவரும் இவர்களை பார்க்க கூட இல்லை.

"நல்லா இருக்கேன் அக்கா, நீங்க முஸ்லீம், இங்க என்ன கோவில் ல?" என்றாள் காயத்ரி.

"ஆக்சுவலா இங்க எங்களுக்கு ஒரு வீடு இருக்கு, நாங்க அங்க தான் யூசுவலா கேரம் விளையாடுவோம், பட் ப்ரவீனுக்கு ரொம்ப மனசு சரி இல்லை னு சொன்னான், சரி, ஒரு சின்ன வாக்கிங் போலாம் னு கூட்டிட்டு வந்தோம்" என்றாள் நர்கீஸ்.

"என்ன விஜி, அமைதியாவே இருக்க" என்றாள் நர்கீஸ்.

"இல்ல ஒண்ணும் இல்ல, நீங்க எப்படி இருக்கீங்க" என்றாள் விஜி.

"ம்ம்ம் ஓகே, ஆனா இந்த பிரவீன் தான் கொஞ்சம் அப்செட்" என்றாள் நர்கீஸ்.

"ஏன் என்ன விஷயம்' என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், பத்து வருஷத்துல முதல் தடவ நெக்ஸ்ட் மந்த் வர டோர்னமெண்ட்ல அன்பிட் ஆயிருக்கான் வண்டில இருந்து விழுந்து, சோ, முபாரக் ரொம்பநாள் கழிச்சு கேப்டனா இருக்க போறான்" என்றாள் நர்கீஸ்.

"அச்சச்சோ, என்னக்கா இது..பாவம் பிரவீன்" என்றாள் காயத்ரி.

"ஓகே ஓகே, இங்க எதுக்கு வெய்ட் பண்ணனும், வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்,ஒரு ஹாப் அன் ஹவர், ஓகே?" என்றாள் நர்கீஸ்.

"இல்லக்கா, வேணாம், நாங்க கெளம்பறோம், டைம் ஆயிருச்சு" என்றாள் விஜி.

"விஜி, நீ எதுக்கு இவ்ளோ அப்செட்டா இருக்கன்னு தெரியும், நீ பிரவீன் கிட்ட ரொம்ப ஹார்ஷா பேசிட்டே, அதான, அந்த லூசு அதை எல்லாம் தப்ப நெனைக்க மாட்டான், டேய் நெனப்பியா டா" என்றாள் நர்கீஸ்.

இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

மிகவும் சிரமப்பட்டு விஜியை சம்மதிக்க வைத்தாள் நர்கீஸ்.

வீட்டில் எதிர் எதிர் சோபாவில் பிரவீன் விஜய் ஒரு பக்கமும், நர்கீஸ் முபாரக் ஒரு சிறிய சோபாவில் விஜி காயத்ரி எதிர் சோபாவில் அமர்ந்தனர். பிளாஸ்கில் இருந்த டேவிடாப் காபி பரிமாறப்பட்டது.

எல்லாரும் மௌனமாய் இருந்தனர். விஜியும் ப்ரவீனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை.

"என்ன இப்டி மௌனமா இருக்கீங்க" என்றாள் நர்கீஸ்.

கடைசியாக காயத்ரி வாயை திறந்தாள்."எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க, விஜியோட இந்த மௌனத்துக்கு நான் தான் காரணம், அவ ரொம்ப கில்டியா பீல் பண்ணறா." என்றாள்.

"ஏன்...என்ன ஆச்சு?" என்றான் முபாரக்.

"அவகிட்டயே கேளுங்க அண்ணா" என்றாள் காயத்ரி.

"என்ன விஜி, என்ன ஆச்சு, எதுக்கு இப்டி அமைதியா இருக்கீங்க, நாங்க உங்கமேல கோவப்படல, தப்பா நினைக்கல,நீங்க என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டோம் விஜி" என்றான் முபாரக்.

பிரவீன் மெதுவாக எழுந்து வாசல் கதவருகே நின்றான்.

விஜி அவன் திரும்பி நின்றுகொண்டிருப்பதை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் கண்கள் கலங்கியது.

"டேய் பிரவீன், என்ன இப்போ உனக்கு, எதுக்கு அங்க போய் நிக்கற?" என்றாள் நர்கீஸ்.

"ஒண்ணும் இல்ல" என்றான் பிரவீன்.

"இப்போ இங்க வந்து உக்கார போறியா இல்லையா?" என்றாள் நர்கீஸ்.

"நர்கீஸ், இங்க சிலருக்கு என் முகத்தை பாத்தா பேச பிடிக்காது, அவங்க மௌனமா இருக்கறது அவங்க கஷ்டப்படறது எனக்கு பிடிக்காது" என்றான் பிரவீன்.

"அப்டி எல்லாம் இல்லக்கா, நீங்க எவ்ளோ ஹெல்ப் பண்ணிட்டு என்கிட்டே சொல்லாம எதுக்கு மறைச்சிங்க,எல்லாத்துக்கும் மேல இவ்ளோ பண்ணிட்டு என்னோட வார்த்தைகளோடு கஷ்டத்தையும் எப்படி தாங்கிக்கிட்டான் பிரவீன், அவனுக்கு இந்த அன்பிட் இந்த கஷ்டம் இந்த காயம் எல்லாம் என்னால தான" என்றாள் விஜி.

"இவன் உனக்காக என்ன பண்ணிட்டான் விஜி, கார் ல டிராப் பண்றது எல்லாம் ஒரு ஹெல்ப் ஆஹ்?" என்றாள் நர்கீஸ்.

"அக்கா, நீங்க உங்க முபாரக் கு செஞ்சு குடுத்த பிராமிச நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க, ஆனா அது என்னை இன்னும் இன்னும் கில்டி ஆகுது" என்றாள் விஜி.

காயத்ரி நர்கீஸ் இருவரும் மாட்டிக்கொண்டதை உணர்ந்தனர். விஜி இந்த விஷயத்தை உடைப்பாள் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை.

"விஜி, என்ன ப்ராமிஸ், என்ன மறைக்கறோம்" என்றான் முபாரக்.

"அண்ணா, எனக்கு எல்லாம் தெரியும், காயத்ரி எல்லாத்தையும் சொல்லிட்டா, என் அப்பா மேட்டர் காயத்ரி அண்ட் செந்தில் மேட்டர் எல்லாத்துக்கும் பின்னாடி நீங்க இருக்கீங்க னு எனக்கு தெரியும் அண்ணா" என்றாள் விஜி.

அவ்வளவு தான், முபாரக் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, சட்டென எழுந்து நர்கீஸ் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்துவிட்டான், எந்த பேச்சும் இல்லை, நேராக பிரவீன் மற்றும் விஜய் இருவரையும் "வாங்க டா போகலாம்" என்று கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

கன்னத்தில் கை வைத்தபடியே கலங்கியபடி "சாரி முபாரக், பிராமிசா நானா சொல்லல டா, அன்னிக்கு காயத்ரி நாம பேசும்போது முழிச்சுட்டு தான் இருந்தா, நீ வேணும்னா அவகிட்ட கேளு டா" என்றாள் நர்கீஸ்.

"ச்ச, வாய மூடு நர்கீஸ், என்கிட்டே பேசாத, எங்க பிரெண்ட்ஸ் யாரும் ஒரு ப்ராமிஸ் பண்ணிட்டா மீறமாட்டாங்க, உனக்கு என்னடி தெரியும், ஈஸியா சொல்லிட்டா எல்லாத்தையும்" என்றான் முபாரக்.

"டேய், லூசா டா நீ, அதுக்கு எதுக்கு டா இப்டி நர்கீச அடிச்ச" என்றான் பிரவீன்.

"நீ சும்மா இரு டா, உன்னை கஷ்டப்படுத்திட்டாங்கன்னு நீ சொல்லும்போது நான் செத்த்துட்டேன் டா, அந்த வலி உனக்கு தெரியாது டா, விஜய் கிட்ட கேளு, அன்னிக்கு ராத்திரி நீ பைக் ல விழுந்து உன்னை ஆஸ்பத்திரில சேத்துட்டு எவ்ளோ அழுத்துருப்பேன் தெரியுமா...." என்றான் முபாரக்.

"அதுக்காக இப்டி அடிப்பியா டா" என்றபடியே விஜய் முபாரக்கை தள்ளிவிட்டான்.

தடுமாறி கீழே விழுந்தான் முபாரக்.

அதுவரை அழுது கொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்த நர்கீஸ், முபாரக் விழுந்த வுடன் விஜயை தள்ளி விட்டு விட்டு இன்னொருவாட்டி என் முபாரக் மேல கைவெக்கிற வேலை எல்லாம் வேணாம், மரியாதையா நடந்துக்கோ விஜய்" என்றபடி விழுந்த முபாரக்கை தூக்க முயற்சித்தாள்.

"விடு டி, ச்ச, அவன் என்னை அடிப்பான் கொல்லுவான், நீ தப்பு எல்லாத்தையும் பண்ணிட்டு நான் பொய் சொன்னா மாதிரியும் நாம் உண்மையை மறைச்சுட்டதை போலயும் ஆக்கிட்டியே, போ, என்னை தொடாத" என்றான் முபாரக்.

"டேய், நர்கீஸ் கிட்ட இப்டி எல்லாம் பிஹேவ் பண்ணாத, அடிச்சு கொன்னுடுவேன் உன்னை, அவ என்னடா பண்ணினா, அதான் சொல்றா இல்ல காயத்ரி அன்னிக்கு தூங்கலன்னு" என்றான் பிரவீன்.

"டேய், ரொம்ப சப்போட் பண்ணாத, அன்னிக்கு காயத்ரி தூங்கிட்டானு தெரிஞ்ச அப்புறம் தான் நாம பேசினோம்" என்றான் முபாரக்.

"இப்போ என்ன டா பண்ணனும், அவ சொல்லி இருந்தா என்ன" என்றான் விஜய்.

"போ டா, எனக்கு பிடிக்கல, அவ்ளோ தான்" என்றான் முபாரக்.

"அண்ணா, ப்ளீஸ் சண்டை போடுக்காதிங்க, சத்தியமா அன்னிக்கு நான் எல்லாத்தையும் கேட்டேன், அப்புறம் தான் நர்கீஸ் அக்கா கிட்ட கேட்டேன், நம்புங்க அண்ணா" என்றாள் காயத்ரி.

முபாரக்கின் கோபம் மட்டும் அடங்கவே இல்லை, நரஜீஸுக்கு மீண்டும் ஒரு அறை, அதனை தொடர்ந்து பிரவீன் - விஜய் - முபாரக் தள்ளு முள்ளு, இடையில் நர்கீஸ் குறுக்கீடு, பின்பு நர்கீஸ் - முபாரக் வாக்குவாதம் என்று என்ன பிரச்சனை என்பதை மறந்து சண்டை முற்ற, பிரவீன் பொறுமையை இழந்து முபாரக்கை ஒரே அறை விட்டான், முபாரக் தடுமாறி சுவற்றில் இடித்துக்கொண்டு கீழே விழுந்தான், தலையில் வீணபை விட்டது.

அனைவரும் ஒரு நிமிடம் உறைந்துவிட்டனர். அந்த ஒரு கோபத்தை முபாரக் கூட பிரவீனிடம் பார்த்ததில்லை.

விஜய் முற்றிலும் அடங்கிவிட்டான். முபாரக்கின் கண்கள் காலனிய விட்டன.

நர்கீஸ் பேச முற்பட்டாள்."பிரவீன் என்ன பண்ற நீ, திமிரா" என்றவளை முபாரக் தடுத்தான்.

"ஏன் டா நிறுத்திட்ட, ஆதி மச்சான். உன்னோட மனசு கஷ்ட பட்டபோது உன்னைவிட வலி ல துடிச்சவன் டா நான், நீ இன்னும் எந்த வலி ல இருக்கன்னு எனக்கு தெரியும் டா, அந்த வலிக்கு என்னால எதுவும் பண்ண முடிலயேன்னு இருக்கு டா, ஒரு அறையோட நிறுத்திட்ட, வாழ்க்கைல முதல் முறை என்னை கோவத்துல அடிச்சுட்டு இல்ல டா" என்றான் முபாரக்.

ப்ரவீனுக்கு பெரிய தவறை கோவத்தில் செய்துவிட்டோம் என்று புரிந்தது.

அமைதியாக முபாரக் "எல்லாத்துக்கும் எல்லாருக்கும் சாரி" என்றபடி யோசிக்காமல் யாருக்கும் காத்திருக்காமல் வெளியே சென்றான்.

"அண்ணா, அண்ணா" என்று காயத்ரி கூப்பிட கூப்பிட நிற்காமல் போனான் முபாரக்.

பின்னாலேயே விஜய் போனான். அனால் இருவரும் வரவில்லை.

பத்து நிமிடம் மௌனம். நர்கீஸ் முபாரக்கிற்கு போன் செய்தாள். விஜய் எடுத்தான். "சொல்லு நர்கீஸ், நான் விஜய்" என்றான்.

"முபாரக் எங்க" என்றாள் நர்கீஸ்.

"அவன் பேசற நெலமை ல இல்ல, நாளைக்கு பேசுவான்" என்றான் விஜய்.

"இப்போ எங்க இருக்கீங்க" என்றாள் நர்கீஸ்.

"நாங்க எம்.கே.எஸ் ல ஏறிட்டோம், கடலூர் போறோம். என்றான் விஜய்.

"வாப்பாவோட கார் எடுத்துட்டு வந்தீங்க?" என்றாள் நர்கீஸ்.

"அதை பிரவீன் எடுத்துட்டு வருவான்" என்றான் விஜய்.

"இப்போ நான் முபாரக் கிட்ட பேசணும்.அவன் என்னை லவ் பண்ரான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறான் ன்றது உண்மைன்னா இப்போ அவன் என்கிட்டே இப்போ பேசணும்" என்றாள் நர்கீஸ்.

"சொல்லு நர்கீஸ், சாரி டா, உன்னை கோவத்துல அடிச்சுட்டேன், நான் கொஞ்சம் அப்செட்டா இருக்கேன், நாளைக்கு பேசறேன் டா, ஐ லவ் யு" என்றான் முபாரக்.

அவ்வளவு அழுகையிலும் "ஐ லவ் யு டூ" என்று போனை கட் செய்தாள் நர்கீஸ்.


ஆனாலும் அங்கே மௌனம் கலையவே இல்லை.

பத்து பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், "சரி, பிரவீன் இங்க வா, இந்த பார்ம் புது கார் நாளைக்கு முபாரக் வாங்கறதுக்கு. நீ இதை பில் பானு, எல்லா டாகுமெண்ட்ஸ் அட்டாச் பண்ணிட்டு இந்த நாலு போட்டோ செத்து ஸ்டாப்பிலேர் அடி" என்று அழைத்தாள் நர்கீஸ்.

"அக்கா வலிக்குதா அக்கா, கன்னம் செவந்து போச்சு அக்கா உங்களுக்கு" என்றாள் காயத்ரி.

"பரவால்ல டா, சரி ஆய்டும்" என்றாள் நர்கீஸ்.

"ஆனா பிரவீன் அண்ணா, நீ முபாரக் அண்ணாவை தள்ளி விட்டது தலை வீங்கி போச்சு தெரியுமா" என்றாள் காயத்ரி.

"பிரவீன் என்ன பண்ற என்ன பண்ற.......டேய் நிறுத்து டா, நிறுத்துன்னு சொல்றேன் இல்ல?" அலறினாள் நர்கீஸ்.

ஒரு பத்து நொடிகள் தான், காகிதங்களை இணைக்க வைத்திருந்த ஸ்டாப்பிலேரை தனது கையில் சரமாரியாக அடித்துக்கொண்டான் பிரவீன்.

"என் முபாரக்கை இந்த கை தான் அடிச்சுது" என்றபடியே செய்துகொண்டதை பார்த்த காயத்ரி கோவத்தில், "லூசா அண்ணா நீங்க, அப்டின்னு பாத்தா உங்க மனசு தான் அவரை அடிக்க சொல்லுச்சு, மனசுக்கு தண்டனை குடுங்க," என்று சொன்னாள் காயத்ரி.

யோசிக்கவே இல்லை, அதே ஸ்டாப்பிளரை நெஞ்சில் படபடவென அடித்துக்கொண்டான், பத்து பதினைந்து இறங்கி இருக்கும்.

காயத்ரி ஸ்டாப்பிளரை தட்டி விட்டுவிட்டு பிரவீனை ஓங்கி அடித்துவிட்டு "மெண்டல், சைக்கோ" என்று திட்டினாள்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஜி கோவத்தில் காயத்ரியை அடித்தாள்."யாரை சைக்கோன்னு சொல்ற,பாத்து பேசு காயத்ரி" என்றாள் விஜி.

மூவரும் வார்த்தைகள் இன்றி அமைதியாய் விஜியை பார்த்தனர்.

நர்கீஸ் மெதுவாக பிரவீனை சமாதானப்படுத்தி மெல்ல உட்கார வைத்து ஒவ்வொரு பின்னாக எடுத்தாள். எடுக்க எடுக்க ரத்தம் அந்த இடத்தில் இருந்து வந்தது.

விஜிக்கும் காயத்ரிக்கும் அதை எடுப்பதை பார்க்கும்போதே வலித்தது.

"சாரி காயத்ரி....தெரியாம கோவத்துல அடிச்சுட்டேன், நீ பிரவீனை சைக்கோன்னு எதுக்கு சொன்ன" என்றாள் விஜி.

காயத்ரிக்கு மனசுக்குள் கோவம் இல்லை. பிரவீன் மேல் அவள் வைத்திருந்த அபிப்ராயத்தில் மாற்றத்தை பார்த்து உள்ளூர மகிழ்ந்தாள்.

வேண்டுமென்றே பிரவீன் விஜி இருவரையும் தனியே விட்டுவிட்டு நர்கீஸும் காயத்ரியும் "நாங்க மெடிக்கல் போய் இந்த லூசு பண்ணிக்கிட்டதுக்கு மருந்து வாங்கிட்டு வரோம்" என்றபடி கிளம்பினர்.

இரண்டு நிமிடம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

விஜி ஆரம்பித்தாள்,"ஏன் பிரவீன், எனக்காக இவ்ளோ பண்ணிட்டு என்கிட்டே ஏன் பேசாம இருந்திங்க" என்றாள்.

"உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய எனக்கு பிடிக்கல விஜி" என்றான் பிரவீன்.

"இதுக்கு என்ன அர்த்தம் பிரவீன்" என்றாள் விஜி.

"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் னு அர்த்தம், உன்னோட சந்தோஷத்துக்காக நான் ஏதும் செய்வேன் னு அர்த்தம்" என்றான் பிரவீன்.

மெல்ல அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் விஜி.

இந்த வாரம் பூரா நீ என்கிட்டே பேசவே இல்ல இல்ல? எவ்ளோ மிஸ் பண்ணிருப்பேன் தெரியுமா? நான் தான் ஈஸியா கோவப்படுவேன், ஈகோ அதிகம் னு சொல்லி இருக்கேனே, நீ பேச வேண்டிது தான" என்றாள் விஜி.

அவன் கைகளை மெல்ல தடவி தனது உள்ளங்கையை பார்த்தாள் விஜி. அதில் பிரவீனின் ரத்தம் இருந்தது.

"வலிக்குதா பிரவீன்?" என்றாள் விஜி.

"முபாரக்கை அடிச்சது தான் வலிக்குது" என்றான் பிரவீன்.

"சாரி டா, என்கூட எப்பவும் போல பேசு, ப்ளீஸ், நான் உன்னை கஷ்டப்படுத்தி இருந்தா சாரி" என்றாள் விஜி.

"இல்ல இல்ல, நீ என்னை கஷ்ட படுத்தலை, அப்டியே இருந்தாலும் நீ தான, உனக்கு என்னை கஷ்டப்படுத்த எல்லா உரிமையும் உண்டு" என்றான் பிரவீன்.

"இனிமே நான் உன்னை கஸ்தப்படுத்த மாட்டேன், நீயும் என்னை கஷ்டப்படுத்த மாட்ட இல்ல?"என்றாள் விஜி.

"என்னால உன்னை கஷ்டப்படுத்த முடியும்னா அது என் மரணம் மட்டும் தான் விஜி" என்றான் பிரவீன்.

"மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் விஜி. அவள் கண்கள் அவன் தோளை கண்ணீரால் ஈரமாக்கியது.

வெளியில் காயத்ரியும் நர்கீஸும் பேசும் சத்தம் கேட்கவே மீண்டும் விஜி எதிர் சோபாவில் போய் அமர்ந்தாள்.

பகுதி 39 முடிந்தது.

--------------தொடரும்-----------------

எழுதியவர் : ஜெயராமன் (14-Sep-17, 10:03 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 308

மேலே