நாளைய உலகமே
இந்தியா
நேற்று-இன்று-நாளை
நேற்று
புலவர் கூடி புலமை வளர்த்து
ஆண்மிக வளர்ச்சிக்கு ஆலயம் அமைத்து
மக்கள் நலனுக்காக மன்னராட்சி அமைத்து
பயிற்சிகள் பெற்று படைவீரர்களாகி
கொள்ளைகாரர்களை விரட்ட குருதி சிந்தி
பாரதநாட்டை பாதுகாத்து தந்தனர்
இன்று
மண்ணை காத்தவர்கள் மலையேற
ஆவணங்கள் அல்ல ஆட்சி பிடித்து
விலைநிலங்களை வீடாக்கி
தரமிகு ஏற்றுமதி பொருட்கள் தரமற்ற விலையாகி
தரமற்ற இறக்குமதி பொருட்கள் தரம்நிரை ஏறி
கற்றவர்களும் கரம்கழுவி கல்வியோடு
வேலைசெய்ய வெளிநாடு செல்கிறார்கள்
நாளை
விற்பனை விலையேற வீதியெல்லாம் ஏலம் போகி
இளைங்கர்கள் சக்தி இடம் தெரியாமல் போகி
விதைப்பதற்கு ஆள் இல்லாமல் விளைநிலம் வீணாகி
இறுதியில் பங்கு சந்தை பொருட்களில் பாரதமும் இடம் பெருமோ!!!!!!!!