சதுரங்கள்

பன்னிரண்டு
சதுரங்களில் ஒன்று கூட
உதவவில்லை என்று
ஜோசியர் பார்த்த
பார்வையில் நான்
புரிந்துகொள்ளாமல் இல்லை
திருமணம் என்ற மணமில்லாமல்
போன பூவாய் அமர்ந்திருந்த
என் எதிரே
கையில் நீருடனும்
கண்களில் காதலுடனும்
நிற்கும் அவரின் மகள் !
உள்ளார சிரித்துக்கொண்டே
நகர்ந்தேன்
இவருக்கு ஒருவேளை
அந்த பதிமூன்றாவது சதுரத்தை பற்றி
தெரிய வாய்ப்பில்லையோ என்று !

எழுதியவர் : இம்மானுவேல் (25-Jul-11, 10:15 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 291

மேலே