சித்திரை வெயில் வாட்டுதே

குறிப்பு: ஊற்று வலைதளம் நடத்திய கவிதை போட்டிக்காக நான்கு மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட கவிதை

சித்திரை வெயில் வாட்டுதே

சித்திரை வெயில் வாட்டுதே
நித்தமும் அனல் மூட்டுதே!
கோடைகாலச் சூரியன் - தன்
கோரமுகம் காட்டுதே!

வறண்ட காற்று வீசுதே
வெயிலில் கண்கள் கூசுதே
வேப்பமரக் காற்றும்கூட
வெப்ப மொழி பேசுதே!

கத்திரி வெயில் காயுதே
நித்திரை கனவானதே
பத்தரை மணி வெயிலுக்கே
மொத்த உடலும் வேகுதே!

புலம்பியவரை போதும் - இனி
புவியைக் காக்க வேண்டும்
கருவேல மரம் கண்டால்
கையோடொழிக்க வேண்டும்!

மரங்கள் நட்டுவைப்போம்
வனங்கள் விட்டுவைப்போம்
அடுத்துவரும் சித்திரைக்குள் - இதை
அனைவருக்கும் சேர்ப்போம்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (26-Sep-17, 3:29 pm)
பார்வை : 284

மேலே