வேதனை

ஆண்டில் மூன்று மாதங்கள்
மழை பொழிந்து
வேளாண் துறை செழித்த
காலம் எங்கே??

நாசி நுனியில் எந்நேரமும்
இயற்கை பசுமையின் செழுமை
ஆளுமை செய்த காலம் எங்கே??

அவ்வையும் அதியமானுமாக
பின்னிப் பிணைந்த நட்பு காலம்
எங்கே போனது??

கருவில் சுமந்த அன்பின் அன்னையை
தாங்கிப் பிடித்த தனயனின்
பாசம் எங்கே??

உடன் பிறந்த அன்பு செல்லங்களுக்கு
துளி வேதனை என்றாலும்
மலையை நினைத்து
வருத்தம் தீர்த்த
அண்ணன், தம்பி உறவு எங்கே போனது ??

உயிர் காப்பதில்
இறைவனுக்கு சமமான
உண்மை மருத்துவ உலகம் எங்கே??

அன்பு, பாசம், நட்பு,
நீதி, நேர்மை அனைத்தும்
இன்றைய அவசர மாய வெள்ளத்தில்
தொலைந்து போன
காலத்தின் கோலத்தை
என்னவென்று சொல்வது???

எழுதியவர் : சாந்திராஜி (6-Oct-17, 10:46 pm)
Tanglish : vethanai
பார்வை : 576

மேலே