அண்ணா
கதவுகள் போல வாசலோடு சேர்ந்து இருப்பது நட்பு என்று நினைத்தேன்....
நட்பு என்றும் சேர்ந்தே இருக்கும்...ஆனால் கதவுகள் பிரிந்து பிரிந்து சேரும்..விளையாட்டாய்...அதுவே சகோதரத்துவம்....!
பணம் சம்பாரிப்பது எளிது..பாசத்தை சம்பாரிப்பது மிகவும் கடிது...அதிலும் இது..மிக சிறப்பு...!
அண்ணா என்று அழைத்தேன்..வார்த்தையில் மட்டுமல்ல....வாழ்க்கையிலும் என்றென்றும் அண்ணா..!
அன்பாக கூப்பிடுவது அழகல்ல..அர லூசு என்று அழைப்பதே அழகு...அண்ணணின் வார்த்தைகள்...!
விளையாட்டுக்கு செய்து தருவாய் கப்பல்...அதில் நீந்தவும் சேர்ந்து கற்றுக் கொடுப்பாய்...
என்னுடன் ஒரு அண்ணன் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இன்று இல்லை..