குமரியின் கோபம்
முக்கடலும் முத்தம்மிட அன்பால் பிணைக்க பட்டவள் இவள்
அலைகள்பல தீண்ட கரைகொண்டு
கரைமீது நிறம் மாறும் மணல் கொண்ட மாயவள்
வெளிநாட்டவர் வியந்து பார்க்க
உள்நாட்டவரை பெருமை படுத்திய
வான் நிற நிலா இவள்
கத்தி இன்றி யுத்தம் செய்த மகாத்மாவையும்
சித்தம்மாற சொல்லால் புவி செய்த விவேகானந்தரையும் ...
நினைவூட்டி தரணிமேல் தாங்கி நிற்கும் தவ தேவதை இவள்
தரைமேல்மிதக்கும் தாரகையே ....
விண்ணை தொட்டு பார்க்க 2004 இல் ஆசை கொண்டாயா ???....நீவளர்த்த மக்கள் மேல் கோபம் கொண்டாயா ??
உலகை ஈரடியில் அளந்த வள்ளுவனுக்கு அரண் செய்த நீ சற்று அமைதி காக்க முரண் செய்தது ஏனோ ???
உயிரை பிரித்து உறவுகளை கரைமேல் கதறவிட்டாயே... இது உன் பாசத்தின் உச்சம் ??அல்ல கோபத்தின் மிச்சமா ??
அடித்தாலும் உ தைத்தாலும் தாயை தேடும் சேயை போல் ...
கொடுத்தாலும் கெடுதலும் உன்னையே இன்றும் நாடுகிறோம்
உன்னைகண்டாலே மகிழ்ச்சியில் திளைக்கிறோம் ...