உள்ளங்கையில் உறைபனியாய்
எங்கே போவேன் உங்களை விட்டு
இதயம் இருப்பது இங்கே தானே
மனதில் ஆயிரம் குறை இருந்தாலும்
மறந்திடுவேன் உங்கள் அன்பை கண்டு
எனக்கு நானே அன்னியமாய்
இருந்த காலம் ஒரு காலம்
என்னை எனக்கு தந்தது
இனிக்கும் உங்கள் உறவல்லவா
காலையில் உன் கடிதம் கண்டேன்
கண்கள் கலங்கின ஒரு நிமிடம்
இதயத்தில் இருந்து வந்த வார்த்தை
என் இதயம் தொட்டது
நட்பில் நம்பிக்கை இல்லாதவர்கள்
ஒரு நிமிடம் படித்து பாருங்கள்
ஆடம்பரம் இல்லாத எழுத்துக்கள்
ஆயிரம் சேதி சொன்னது எங்களுக்கு
அன்பு அஞ்சு
தனி மடல் இட்டு
பேசிக்கொள்ள ஏதும் இல்லை
இனி இங்கே
இமயத்தின் மேல் நின்று சொல்
அண்ணா வா என்று - அடுத்த நொடி
உன் வீட்டு வாசலில் .... நான்
பாசத்தை விட பெரிது வேறொன்றும் இல்லை
நடிக்க தெரியாத பாசம் மட்டுமே
கோபப்படும் , கொந்தளிக்கும் , கும்மாளமிடும்
ஒரு நொடியில் குளிர்ந்து போகும்
உள்ளங்கையில் உறைபனியாய்