புத்தாண்டே நீ வர வேண்டாம்
சித்திரையில் வித்து இட்டு
நித்திரையில் முளைக்கொட்டி
பத்தரை மாற்று தங்கமணிகள் விளைவித்த உழவன்
புத்தாடை உடுத்தி வரவேற்றான் அன்று ---ஆனால்
இன்றோ.....
மீண்டும் அதிகார வர்க்கத்தின் அஸ்தினாபுரத்து காட்சிகள் ஒவ்வொன்றாய் அரங்கேறும் போது ஆடையின்றி
அம்மணமாய் தெருவில்......
பின்பு
யாருக்காக நீ பிறக்க வேண்டும்--அவன்
வெற்றுடம்பை கண்டு வெட்கிக்குனியவா
ஆதலால்
வரவேற்க நானுமல்ல
வரவேண்டாம் நீயும் இன்று......