பேயாடும் பொழுதுகளோ
வாயாடும் வானிலவே
போனதென்ன இத்தூரம்
பேயாடும் பொழுதுகளோ
நீயற்ற இந்நேரம்..! கண்மூடி எத்தனித்தேன்
குறைகண்டு மறந்திருக்க
விண்ணிடிந்து விழும்போல
இன்னும்குறை தென்படலை..!
நெஞ்சத்தை புண்ணாக்கி
நினைவோடும் பின்னோக்கி
நெடும்போர் இதயத்தில்
இணைதலை முன்னோக்கி...
நிழல்தேடும் பெண்மயிலே
நீவாடும் கொடுமையிலே
உயிர்போகும் சடுதியிலே
உனையகன்ற அநீதியிலே!
உறவில் மறந்தேன்
பிரிவில் உணர்ந்தேன்
இதயம் தடித்திட
உன்துணை வேண்டுமென..!