ஏய் என்னவளே

எந்தநாளும் எனைமறவாத
பெண்ணென உனைக்காண்கையில்
அந்திவானம் அது தெரியாமல்
ஆயிரம் மழைத்துளி விழுதே
பேசிட மொழி கேட்கிறாய்
பேதையே என் மொழி நீயடி
வீசிடும் தென்றல் காற்றிலே
வீணைக்கு இசை மீட்டடி
கொடிமலரெடுத்து தோரணம் அமைப்பேன்
நடுநிசி நிலவொளி பிம்பங்கள் பறிப்பேன்
எச்சில் முத்தத்தில் மேனி நனைத்து
நிலாவண்ண முத்திரை பதிப்பேன்