என் காதல் சுவடுகள்

வெறும் கிறுக்கல்களோடு மட்டும் ஓய்ந்துவிடாத என் பக்கங்கள் ....
நித்தமும் யோசனையோடு ஒட்டிக்கிடக்கும் உன் நினைவுகளை பதிப்பித்துவிட பரீட்சைய படுகிறேன்
கொட்டிதீர்க்கிறேன் ஒருவழியாய்
பல பேர்களின் பார்வைகளில் எதுவும் பத்திரமாய் பதியவில்லை அவனின் பார்வைக்குள் அவ்வளவு
அவ்வளவு கச்சிதமாய் சென்றுவிட்டேன். பார்வை சண்டை , பார்வை கொலை , பார்வை பதிப்பு என பார்வைகளின் அவ்வளவையும் மொத்தமாய் ஒரு நொடியில் சொல்லிக்கொடுத்த விழி அழகன் அவன்.
நான் சேமித்த என் பெண்மையை சொல்லிவிடாமல் எடுத்துச்சென்றான் சொல்லிக்கொள்ளும் பருவ வயதில்,,,, என் கல்லூரி படிப்பின் நேரம் ஏனோ காதல் படிப்பும் கற்றுக்கொடுக்காமலே படித்துவந்தேன் .
வசமாய் அவ்வளவு வசமாய் அவன் முகம் தெரியும் இடம் தேடி அமர்ந்தேன் ,,,,,,நிகழாத என் கனவுகள் எல்லாம் நிஜமாய் நடந்துவிடத்தான் என் ஏக்கங்கள் ,கொஞ்சமாவது தெரிந்துகொள்ளும்படி என் கண் ஜாடைகள் ......... என்றெல்லாம் சிதறிக்கிடக்குது என் பக்கங்கள் .............
முதல் நாளின் முதல் சந்திப்பை அவ்வளவு எளிதில் மறந்துவிடத்தான்முடியுமா ? அந்த முதல் சந்திப்பின் முடிவுகள் இன்னமும் மறையவில்லை என் மனதில் இருந்து
கல்லூரி ஒன்றுதான் வகுப்புகளும் ஒன்றுதான் அதனாலோ என்னவோ சண்டைகளில் நம் ஆரம்பம்
எனினும் அது சபலமாகி போகும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை பத்திரமாய் பதிவேற்றிக்கொண்டேன் பக்குவமாய் நேரடியாய் நீ திட்டிய பார்த்த ...................................................
அங்கு நடந்ததை ஒரு வரியில் எழுதத்தான் முடியவில்லை
முதலில் உன் கண்களோடு நான் நடத்திய யுத்தங்களை சொல்லவா இல்லை வார்த்தை கோவைகளை அதனுள் ஒளிந்து கிடைக்கும் என் ஆசைகளை சொல்லவா ,,,, எது எப்படியோ !!! எண்ணமும் நான் மீளவில்லை அவன் என்னையோ பார்த்த திமிர் விழிகளில் இருந்து
விசாரித்து பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல்
போனது அவன் விழி பார்த்து நான் வியர்த்துவிட்டதால்,,

கொஞ்சம் கொஞ்சமாய் கொத்தித்தின்ன அவன் பார்வையில்
மெல்ல நான் குளிர்தான் நான் காய்ந்துகொண்டேன்,,

இருவிழி போதவில்லை அவனை ஒருமுறை பார்த்துக்கொள்ள

நிலவின் வெண்மையை கொஞ்சம் குறை கூறுகிறேன்
அவன் கருவிழியை நான் மொத்தமாய் ருசித்துவிட்டதால்

ஓய்ந்துவிட்ட சண்டை காட்சிகளை ஓயாமல் புரட்டி பார்க்கிறேன் அவன் பார்வையால்நான் ஒரு வழி ஆனதால் இதுவரை எழுதியதை புரட்டி பார்த்தேன் எதிலும் இல்லை எந்த புதிரும் இன்று முதல் விடை தேட ஆரம்பிக்கிறேன் என் புரியாத புதிர் நீ என்று அறிந்து அவன் விழி மட்டும் பார்க்க விடுப்பு ஏதும் இல்லாமல் சென்றேன் கல்லூரிக்கு
கணினி வகுப்பில் கசித்தமாய் இடம் அமைத்தது .அதனாலே கணினி வகுப்பும் அதிகமாய் பிடித்தது எதிர் எதிராய் நாம் அமர அந்தநொடி நினைகிறேன் கவிக்குள் ,


எழுதி முடித்தவுடன் ..................
எனக்குள் ஒரு சிரிப்பு என்ன மதி நீ கவிதைலாம் எழுத ஆரபிச்சுட்டியா ????? எழுதியதை முழுதாய் பிடித்துவிடும் முன்பே அதை பங்கு போட உற்ற தோழியாய் ஒருத்தி என் ரகசிய பதிவை என் ராட்சசி அவள் அழகாய் புரிந்து கொண்டால் என் பக்கங்களில் நாம் இருவர் மட்டும் என்ற திமிரில் நிரப்பிக்கொண்டு இருக்கையில் மூன்றாய் வந்து ஒட்டி கொண்டால் நிரம்பி வழிந்த என் காதல் பார்வையை மறக்காமல் ஆவலுடன் பகிர்ந்துகொண்டேன்
என் புரியாத புதிராய் அவன் நான் தெரிந்துகொள்ளும் பதில்களாய் அவள் .....காதல் திளைப்பிலோ
இல்லை, தந்தை இழந்த தாக்கமோ ,,இல்லை ஏதொரு நிகழ்வோ என்று தெரியவில்லை அழகான பாசத்தை பங்கு போட மறந்தேன் என் குடும்பத்துடன் ,,,,ஒருவேளை என் வயது திமிராய் இருக்கலாம்
அவன் அவள் , அவன் அவள் என்றே நகர்ந்தது என் பக்கங்கள் நேற்றைய பொழுது இன்றய பொழுது என்று எல்லாம் மொத்தமாய் முழுமையாய் மாறிக்கொண்டது அவர்களால் ...

என்ன காரணம் என்றே தெரியாமல் எங்கள் குடும்ப வருமானம் பாதியாய் சுருங்கிக்கொண்டது. தேவையான அளவு பணம் கூட என் தேவைக்கு வரவில்லை கல்லூரி சென்றுவர ரூபாய்.35 ஆகும் அனால் தினம் என் கையிருப்பு 30 மட்டுமே வந்து சேரும் இதில் ரூபாய் 5 கும் எனக்கும் அவ்வளவு
தூரம் இருந்தது தூரம் இருந்தால் என்ன தோழி தோள் மட்டுமா கொடுப்பாள் ....!!!!!!
5 ரூபாய் என்று அலசி பார்க்காமல் தினம் கையில் திணிப்பால் அளவுக்கு அதிகமாக ......................
காசு என்னை பார்க்காததால் கேன்டின் செல்லும் வழியை மறந்துகொண்டேன் தினம் கையணைத்து இருக்க பிடித்து இழுத்து செல்வாள் என்னையும் அவள் செலவுகளுக்குள் திணித்து
பார்க்கும் பண்டங்களை இதழ் வழி வேண்டாம் என்பேன் என் மனம் புரிந்தவளாய் வாங்கி திணிப்பால்
எனக்கு தெரிந்து ஒருமுறை கூட வாகிய பண்டங்களுக்கு நான் பணம் கொடுத்தது இல்லை அவளை போலவே என்னையும் அவள் நினைத்தாள்

அவனோடு நடந்த அத்துணை நினைவுகளையும் கொட்டி தீர்ப்பேன் அவளிடம் மட்டும் ..... பார்த்து பேசி பழகிக்கொள்ள தோழிகள் இருக்கின்றனர் கணக்கில்லாமல் .நான் அவனை பற்றி அவன் விழி சேட்டை பற்றி மட்டுமே சொல்லி " கொல்லும் " உரிமை தோழி அவள் ....

தினம் வேறு சிந்தனை மறந்துபோனவளாய் அவன் சிந்தனை மட்டும் போர்த்திக்கொண்டேன்
நாட்கள் சலித்தாலும் ஏனோ அவன் பார்வைகளில் மட்டும் சலிப்புகள் இல்லை. தொடர்கதையாய் தொடர்த்துக்கொண்டு இருக்குது அவனோடு கொண்ட என் பார்வை கதைகள் என் சின்ன சின்ன சிரிப்பிலும் அவன் சிறப்பாய் மறைந்துகிடக்கிறான். எவன் விழி பார்த்த எந்த நொடி ஏனோ பிறக்குது என் தாய் மொழியில் ஒரு கவி ....

இரவுக்கு ஏது ஒளி ,
உன்னில் தான் என் இரு விழி ...

சொல்லி கொடு சிக்க வைப்பது எப்படி என்று ,
நான் சொல்கிறேன் சிக்கியது எப்படி என்று .......

தெளிவாய் காட்டும் என் ஆணவம்
அனாதை ஆகிவிட்டது உன் இரு விழி பார்வையால் ...

வாட்டுகிற கண்ணில் மீட்டுகிறாய் வீணை
கேட்குது மவுன கானம்
தள்ளிவிட்டும் செல்ல மனம் இல்லாமல்

சொக்கி சொக்கி புலம்பல்
என் சொக்கநாதன் நீ என்று

திக்கி திக்கி பேசுகிறேன்
தெளிவாய் நீ என்னை கண்டபோது

மனம் இல்லாமல் பிரிந்த கண்ணும்
மானம் மறந்து உன்னை காண

தெளிவாய் பார்க்குது என்னவனின்
கண்ணும் அதே வெட்கத்தோடு .

என்னை மறந்து அவனை கண்ட நொடிகளில் அவன் கண்ணும் என்னை பார்த்ததை கொஞ்சம் உணர்ந்துகொண்டேன் அருகில் மிக அருகில் அவன் வருவதை கண்டு இருவிழி மையிட்டு காத்துகொண்டு இருக்கிறேன் நானும் என் பக்கங்களும் .....................................................................
என் விடை நீ என்ன விடை சொல்வாய் என்று ....,...,...,

எழுதியவர் : வான்மதி கோபால் (21-Nov-17, 3:59 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 361

மேலே