நான்
நான், உன்னை திருட
வந்த திருடன்.
உன் மனதை, பரிக்க
வந்த வேடன்.
அன்பை, செலுத்த
வந்த காற்று.
அழகை, அளக்க
வந்த அமைப்பு.
உயிரை, உன்னோடு சேர்க்க
வந்த உயிர்.
உடை, உன்னை உடுக்க
வந்த உண்மை.
இயற்கை, உன்னுடன் சேர
வந்த இன்பம்.
மண், உன்னில் முளைக்க
வந்த விதை.
காதல், உன்னில் கரைய
வந்த பனிக்கட்டி.
வெப்பம், உன்னில் வெந்து
கொண்டிருக்கும் விறகு.
நாம், நாளை காதலால்
கவிதையாக போகும் பறவைகள்.