முத்தம்

காலையில் எழுந்து
விழிதிறவாது பருகும்
முதல் ஆகாரம்
உன்முத்தம் !...
முத்தம் தாராது
நொடிகூட நகராது
கொடுத்தால் என்தேகம்
அவ்விடம் விட்டுமாறாது
செய்தித்தாளின் முதல்பக்கம்
தலைப்புச்செய்தி முத்தம்
நிகழ்ந்தது காதல்யுத்தம்
வேண்டும் நிதத்தம்நித்தம்
எதிர்பாராது நீகொடுக்கும்
முத்தத்தின் ஈரம்காயாது
முத்தச் சண்டையிடாமல்
நான்கிதழ்களும் ஓயாது
முத்தத்திற்கும் - உன்
பேரழகின் சித்தத்திற்கும்
காலமெல்லாம் காத்திருப்பேன்
வாடாதமலராக பூத்திருப்பேன் !...