நியா நயா
ஏண்டி கனிமொழி உன்னோட அக்கா முதல் பிரசவத்திலேயே ரண்டு பெண் கொழந்தைங்க பொறந்திருக்குதாமே! எல்லாம் நல்ல இருக்கறாங்களா?
😊😊😊😊😊😊
உங்க மாதிரி பெரியவங்க எங்கள வாழ்த்த இருக்கும் போது எங்களுக்கு எந்தக் கொறையும் வராதுங்க பாட்டிம்மா. அக்காவும் கொழந்தைங்களும் நலமா இருக்கறாங்க.
😊😊😊😊😊😊
சரி நம்ம தமிழங்க வழக்கப்படி கொழந்தைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சாச்சா?
😊😊😊😊😊
பேரு வச்சாச்சுங்க பாட்டிம்மா. ஆனா இந்திப் பேரு வைக்கல.
😊😊😊😊😊😊
என்னடி கனிமொழி சொல்லற?
😊😊😊😊😊
அக்கா இந்திப் பேருங்களத் தேடிட்டு இருந்தா. அதுக்குள்ள மாமா ஒரு கொழந்தைக்கு 'நியா' -ன்னும் இன்னொரு கொழந்தைக்கு 'நயா' -ன்னும் பேரு வைக்கலாம்னு சொன்னாராம். சரி இந்திப் பேருங்க மாதிரி இருக்குதேன்னு அக்காவும் சரின்னு சொல்லிட்டாளாம். அந்த ரண்டு பேருங்களும் ஆப்பிரிக்க நாட்டுப் பேருங்களாம்.
😊😊😊😊😊😊
நம்ம தமிழ் மக்களுக்கு ஆப்பிரிக்கா பேரும் இந்திப் பேரும் புரியாத பேருங்கதான். எந்தப் பேர வச்சா என்ன?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
◆◆◆◆●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆