இயற்கையின் இன்னிசை

தென்றலின் ஊதல் இசை
தெள்ளிய நதியலை இசை
மலை அருவி தருவதும் இசை
மாந்தோப்பு இலை அசைவும் இசை
மென்மலர் மெல்ல விரிவதும் மெல்லிசை
பூஞ் சோலைகள் காற்றிலாடுவதும் இசை
பறவைகள் வானில் பாடுவதும் இசை
விடியுமுன் வைகறைப் பொழுது தருவதும் மௌன இசை
இவை தினம் இயற்கையில் அரங்கேறும் இன்னிசை !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-17, 8:42 am)
Tanglish : iyarkaiyin innisai
பார்வை : 248

மேலே