நீயாக நான்
சுற்றிச்சுற்றி வருவேன்
பம்பரமாக அல்ல
உனக்காக வளைவேன்
வானவில்லாக அல்ல
நானும் தொடர்வேன்
நிழலாக அல்ல
மேனியில் படர்வேன்
கொடியாக அல்ல
முகஒளியில் மிளிர்வேன்
வைரமாக அல்ல
முத்தஈரத்தில் துளிர்வேன்
விதையாக அல்ல
உனக்குள்ளே மறைவேன்
இன்பமாக அல்ல
நேரத்திற்கேற்ப மாறுவேன்
உணர்வுகளாக அல்ல
கண்ணாடியில் பார்
நீயாக நான்
உன்னுள்ளே வாழும்
உன்னுயிராக நான் !...