காதல் ஓவியம்

காதல் ஓவியம்...

முகம் தெரியா இருவர்
முடி வறியா பொழுதினில்
தனை மறந்து மேதினில்
கட்டுண்டு கிடந்தனர் காதலில்...

ஈருடல் ஓர் உயிராய்
கூடலில் அண்மையை மறந்து
முகத்தோடு முகம் உறவாடிட
மோகத்தினராய் நின்றார் ஆங்கே..

கொஞ்சிடும் கண்கள் நிலைதாழ்ந்து
நீயே என்று மூடியபடி
நெஞ்சமதில் அவன் மஞ்சமென
மயங்கி கிடக்கின்றாள் அவள்அங்கே...

மேகம் மறைத்த நிலவினைபோல்
முகம் தெரியா இருவரல்ல
இருவரும் மயங்கி கிடந்ததனால்
இருவர் முகமும் மறைந்ததாங்கே...

கோன்முடி - தெய்வசிகாமணி

எழுதியவர் : தெய்வசிகாமணி (25-Dec-17, 11:51 am)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
Tanglish : kaadhal oviyam
பார்வை : 151

மேலே