முதல் முத்தம்

யாரவள்..?
என்னையே பார்க்கிறாள்
புது முகம்
இதற்கு முன் எங்கிருந்தாள்
எனக்கென்று பிறந்தவளோ..?
அல்ல- நான்
அவளுக்காகப் பிறந்தவனோ..?
வெளிநாட்டவளோ..!- அல்ல
வேற்றுக் கிரக வாசியோ..!?
வேறெவரையும்
பார்ப்பதாய்த் தெரியல்ல
என்னை மட்டுமே
பார்க்கிறாள்
என்னருகே வந்து
இறுக்கியணைத்து
இரு கண்ணத்திலும்
நச்சென்று நாலு முத்தம்
ஒரு பெண் தந்த
முதல் முத்தமா..?- அல்ல
முத்தம் தந்த முதற்
பெண்ணா.?
எந்த வகையில் சேர்ப்பேன்
புதுத்தெம்பு பிறக்கிறது
ஏன்? எதற்கு? யார்?
ஏதும் புரியுதுல்ல
நிழலாய்ப் பின்தொடர்கிறாள்
நிஜமாய் நேசிக்கிறாள்
ஒரு நொடி மறைந்தாலும்
ஓ...ன்னு அழுகிறாள்
சதாவும் அவளைப்
பார்க்கனும்
சகஜமாய்ப் பழகனும்
இறுதிவரை
இப்படியே இருப்பாளா..?
அப்படியென்றால்,
அவளிடம் ஒன்று சொல்லனும்
சிலபோது
சிரித்துக்கொண்டே
சொல்கிறாள்
ஓடாதீங்க மகன்!
கீழே விழுந்திடுவீங்க..!

22112015

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:35 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 236

மேலே