என்னவள்

கொடியில் காயும் கைக்குட்டை
காற்றடித்துக் கீழே விழுவதும்
நான் எடுத்துக் கொடுப்பதும்தான்
தினம் தொழிலாயிற்று
இப்போது காற்றடிப்பதில்லை
என்றாலும்
கைக்குட்டை விழுகிறது

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 10:39 pm)
Tanglish : ennaval
பார்வை : 356

மேலே