இறைநேசரைப் போற்றுவோம்
வங்கத்தின் கரையோரம் அமைந்த தர்க்கா
***மனக்குறைகள் நீக்கிவிடும் நாகூர் தர்கா !
மங்காத புகழோடு விளங்கும் தர்க்கா
***மதபேத மின்றிமக்கள் வணங்கும் தர்க்கா !
சங்கடத்தில் ஆழ்ந்தோரைச் சாந்தப் படுத்தும்
***சகலநோய்க்கும் மருந்தாகி நலத்தைக் கொடுக்கும் !
இங்குநிதம் அற்புதங்கள் நடத்திக் காட்டும்
***இறைநேசர் ஆண்டகையைப் போற்று வோமே !!
சியாமளா ராஜசேகர்