கடைசி வரைக்கும் தெரியாமலேயே இருக்கட்டும்
இதயத்தை உடைத்தெறியும்
இத்தனை வலிகளும்
இயல்பாகிப் போன ஏக்கங்களும்
சுட்டெரிக்கும் சூழ்நிலையும்
சுவாசமெல்லாம் அழுத்தங்களும்
பொழுதெல்லாம் சூழ்ந்த பொய்களும்
போலிகளுக்குள்ளே உழல்வதும்
தவிக்கவிட்ட தனிமைகளும்
தன்னலமான அன்பும்
விரட்ட விரட்ட தொடர்வது தான்
நீங்கள் கொண்டாடும் காதலென்றால்
கடைசி வரை காதலும்
கன்னியிவளுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்..!!