பிறவிப் பயன்
கண்ட நாள் முதல் உன்னைக்
கடிகார முள்ளாகச் சுற்றுகிறது என் மனம்
என் அசையிலும் நீ அசைவிலும் நீ
நானாக நானில்லை நீயாகிப் போகிறேன்
என்னை அதகளப் படுத்துகிறாய் நீ
ஒரு மணியில் ஒரு தரம் அசையும்
சிறிய முள்ளாகவும் வேண்டாம்
ஒரே ஒரு தடவை என்னை பார்த்து
நீ புன்முறுவல் செய்தாலே போதும்
நான் பிறவிப் பயனை அடைந்து விடுவேன்
ஆக்கம்
அஷ்ரப் அலி