தலைமகள்

முக்கனியில் மூத்த
முதல்கனி நீயோ !
தமிழென்ற மொழியின்
தலைமகள் தானோ !...

சிற்பியின் கலைவண்ணத்தை
சிகைஅலங்காரம் சொல்லுமே !
சிந்துச்சமவெளியை வெல்ல
சிற்றிடை மட்டும்போதுமே !...

கன்னிப்பெண்ணே உன்னை
களவாடத்தான் வருகிறேன் !
கணவனாக உறவாடி
கஷ்டங்கள்தீர ஆசிதருகிறேன் !...

தலைவியே என்வீட்டின்
தலைவாசல் மிதிப்பாயா !
மனைவியென்ற முத்திரையை
மறுபிறவியிலும் பதிப்பாயா !...

சொந்தபந்தம் வந்தாலும்
சொந்தமென்றும் நீதானே
சொத்தூசுகம் கொடுத்தாலும்
சொர்க்கம்வரை வருவாயே !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (7-Jan-18, 4:26 pm)
பார்வை : 126

மேலே