சிந்தனை

தன் உயிரை யாரும் தொட்டு விட முடியாது
தன் நிழலை யாரும் தாண்டி விட முடியாது
தன் உடலை யாரும் தூக்கி விட முடியாது
தன் மூச்சை யாரும் தேக்கி விட முடியாது
பின்பம் இன்றி தன் விழியை பார்த்து விட முடியாது
வானத்தை போர்வையால் மூடி விட முடியாது
வானவில்லை வனத்திலேயே நாகூராம் இட முடியாது
தவறு செய்தாலும் காற்றை தண்டிக்க முடியாது
தவறி கூட தண்ணீரில் சுவாசிக்க முடியாது


இப்படி தன்னால் முடியாது என்பதை நம்
சிந்தனை கனவிலும் சிந்திப்பதே இல்லை

சிந்திக்க முடிந்தாலே அதை செய்து விட முடியும்
என்பதே இதன் ஆழமான கருத்து....

எழுதியவர் : ராஜேஷ் (10-Jan-18, 3:45 pm)
Tanglish : sinthanai
பார்வை : 1948

மேலே