அக்கா
அவள் உயிரென நான் ஆகையில்
என்னிமை சிந்தும் கண்ணீரையும்
தாங்கா அவள் நெஞ்சம்....!
கண்ணென அவளிமையில்
வைத்திட்டு காத்தாள்
அவள் என் அன்னையும் அல்ல..!
தோல்விகளில் துவல்கையில்
தோள் மீதுசாய்த்திட்டு
தொடுவானமும் உன் வசம் என்றால்
அவள் என் தோழியும் அல்ல...!
அறம் எதுவென கற்றுக் கொடுத்திட்டவள்
என் ஆசிரியையும் அல்ல....!
இவள் என்னுயிர் ஆன
#அக்கா