கிராமத்துக்கிளியே

கொஞ்சும் கிளியே கொய்யாக் கனியே
இதயம் படரும் இளந்தளிர் பூங்கொடியே
பட்டாம் பூச்சி இமைக்குள்ள மின்னும்
கண்ணால என்நெஞ்சம் பனியாக ஒடயுதே......


கறுத்த கூந்தலின் மல்லியப்பூ பந்தலோடு
சிறுத்த இடையாட என்மனசு சிக்கிடுச்சே
செவந்து சிரிக்கும் ரோசாப்பூ ஒதட்டால
எனக்குள்ள குளிரும் தீயும் மோதிடுச்சே......


காத்துல மெதக்கும் பஞ்சாக நானுந்தான்
ஒன்னப் பாத்த நாள்முதலா பாறக்குறேன்
ஆத்துல குதிக்கும் அயிர மீனாகத்தான்
ஆசயில அடிக்கடி உள்ளம் துடிக்குறேன்......


வானத்து நெலவோ?... ஒன் நாணத்தில் வருதே
கார்மேகம் மறைக்க என்தேகம் சுடுதே...
திரும்பும் தெசயெல்லாம் ஒன் நெழலு விரியுதே
கரும்பு சாறாக என்நெனப்பு வழியுதே......


நெல்லுக்குள் பாயும் குளிர்ந்த நீரப்போல
என்உசுரக் கடந்து நீதான் பாயுற
ஒடம்பெல்லாம் பூப்பூத்துக் காதலெனும் தேன்சுரக்க
பூமியில் இருந்தே சொர்க்கத்துல வாழுறேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jan-18, 4:15 pm)
பார்வை : 85

மேலே