புன்னகை அரசி

உயிரை அரிக்கும் அமிலமாய் உணர்வுகள்
புரியாத புதிர்களாய் புதின உறவுகள்
இலக்கை அடைய இயலாது திணறிடும் கனவுகள்
விடியலை வேண்டி இருளில் தேடுகின்றாள்...

சுவாசம் மட்டும் சுயமாய் சுதந்திரமாய்
சிந்திக்கத் திறன் இருந்தும் சித்தம் சூனியமாய்
பூவோடும் பொட்டோடும் பட்டோடும் பகட்டோடும்....
புன்னகைப் போர்வையில் சுயம்பிழந்து நடிக்கின்றாள்....

அந்தில் பறவைகளின் கொஞ்சும் முணங்கல் கேட்டு
சந்தியிப் பொழுதில் மலர்சூட்ட விழைகிறாள்
பந்தையக் குதிரையாய் முந்தைய நினைவுக்குள் ஊடுருவி
சந்தங்களை எழுப்பி சதையம் பாடுகின்றாள்...

பள்ளம் மேடு கடந்து பாய்ந்திடும் வெள்ளம்
கள்ளம் கபடமற்று கெண்டையாய் துள்ளும்
அள்ளும் முகவையாய் அளவாகி முடங்கினும்
இல்லமே இனிதென்று வாழும் இவள் உள்ளம்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (17-Jan-18, 7:20 pm)
Tanglish : punnakai arasi
பார்வை : 308

மேலே