பள்ளியில் பயின்ற பக்குவம்
நாள் : 26.01.2018
இடம் : சீதாதேவி கரோடியா
அருமையான நாள்...
அதரம்(இதழ்) விட்டு அகலா புன்னகை...
ஆசான்களை கண்ட களிப்பு(மகிழ்ச்சி)..
ஆழ்ந்துணர்ந்த அமைதி..
இன்சொல் மொழிந்தும்.. இன்னிசை பொழிந்தும்..
ஈரேழு உலகமும் மதித்தாற்போல்...
ஈகையுடன்(well wished) அனைவரும் புன்னகைக்க..
உயரிய பற்றுடன்.. உருக்கும் பக்தியுடன்..
ஊமைபோல் இருந்தேன்-உள்ளந்துள்ளும் ஊக்கத்துடன்..
என்றோவோர் நாள் நானும்தான்..
ஏற்று நடத்திய நாடகம் இது..
எதார்த்தமாய் கண்டேன்..
ஏகாந்த தெளிவுடன்..
ஒருமித்த மனமாய்.. ஓயாத எண்ண அலைகளுடன்..
கனவாய் கரைந்த நாட்களோ..?? -நான் கற்க வந்த நாட்களென..!!! காலம் கடந்தும் காற்றாய் கரைந்தும்
கல்விகற்றுத்தந்த கரைதான் இதுவோ..!!
கிளிகளின் கீதம் போல் கத்தித்திரிந்த நான்..!!
கீதையின் வாக்குபோல்("காலம் மாறும்-இது தொடர்வதல்ல-எதுவும் நிரந்தரமல்ல") கடமையின் கரம் பிடித்து...
குருவின் விரல் விடுத்து.. (12th over)
கூர்ந்த நோக்குடன் கண்ணிய போக்குடன்.. கடமையில் கரைந்தேன்..!!(professional life)
காணப்படும் காட்சி..
கடந்தகாலத்தின் சாட்சியாய்.. கண்முன்னே ஆட்சி செய்ய..!!
அன்று : உண்மையான பக்தி-பாசம்-மரியாதை(எதுவென அறியேன்)..!!
இன்று :
தயக்கம்-தவிப்பு-தடுமாற்றம்..(எல்லாமுமாய்)..!!
காயமென ஏதுமில்லை..
கடந்த-கற்ற நாட்கள் போல் உரிமையில்லை-உறவுமில்லை..!!
நின்றுபேச நேரமில்லை-நேசமில்லை..!!
நேசமிருந்தும் பேச தயங்க காரணம்..!!!
அன்றுபோல்... இன்றும் தொல்லையென (disturbance) யாரும் சொல்லும்படி இல்லாமல் இருக்கவே..!!
கனவு கண்டார் போல் கணங்கள் கடக்கிறது-கனக்கிறது..!! ஒவ்வொரு முறையும்
ஓயா புதிர்களுக்கு
ஓய்வெடுக்கிறேன் பதிலுடன்
பள்ளியின் மடியிலே..!!!