கருப்பு நிலா என் கிராமத்து பைங்கிளி

முழு நிலவே நீ
தேய்ந்து தேய்ந்து போகின்றாய்
மூன்றாம் பிறையாய் பார்த்தேன்
நான்காம் பிறைக்கூட கண்ணில் பட்டது
அதன் பின்னே காணவும் அரிதாகி
மங்கிய நிலவே , உன்னை
நான் தேடி தேடி இருந்தபோது
விண்ணில் காணாமல் போய்விட்டாய்
ஆனாலென்ன, நீ தான் இப்போது
மண்ணில் கருப்பு நிலவாய்
என் முன்னே என்னவளாய்
கிராமத்து எழில் அரசியாய்
பாடும் இசைக்குயிலாய்
பள்ளுப் பாடி ஜதி சேர்த்து
புள்ளி மான் போல் துள்ளி துள்ளி
ஆடி வந்தாய் ,கருப்பு நிலவே
இந்த மாமனுக்கு காதல் இன்பம்
தந்து இன்ப லோகம் இட்டு செல்கின்றாய்
இப்படியே என் கண்ணம்மா நீ
கருப்பு நிலவாய் இங்கேயே இருந்துவிட்டு
தைப்பூச திருநாளில் மாமன் உனக்கு
அம்மன் கோவிலிலே தாலி கட்டி
என் இல்லக் கிழத்தியாய் ஆக்கிடுவேன்
மாமன் நான் , வா வா எந்தன் கருப்பு நிலா .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jan-18, 10:15 am)
பார்வை : 200

மேலே