உன் அன்பு உண்மையானால்
உன் அன்பு உண்மையானால்....
நான் இல்லாப் பொழுதுகள்
உப்பில்லாப் பண்டமாகும்
தீராது தேடல்...
அரசனே உன் வாசல்
வந்தாலும்
வெற்றிகள் பல சூழ்ந்தாலும்..
வெறுமையே துணையாகிப் போகும்..
என் துணை உன் பலமாகும்
என் பிரிவு உன் பலவீனமாகும்
இதுவெல்லாம் கடந்தால்..
உன் உண்மை இதயமெனும் சிம்மாசனத்தில்
நான் பெருமைக்குரிய மகாராணி...