தப்பு கணக்கு

இரண்டும் இரண்டும்
மூன்று
எப்படி என்றால்
அப்படி தான்

234 - இல்
என் மையின்
மெய் வடித்த
புள்ளி
அரைக்கால்

முதுகின் வரிகள்
சமைத்த
வரி சுமைகள்
ஜிஎஸ் டி
பெயரில்

"பள்ளி" வாசலில்
வரிசையில்
ஒரே மாதிரி
தொழுகைக்கு
மாறுகிறது
"₹ " எழுத்து

தேர்வாணைய
விழுக்காடு
பணிக்கு
கொஞ்சம் தாமதமாகி
எண்களை சேர்க்கிறது
ஏன் என்றால்

இரண்டும் இரண்டும்
மூன்று
எப்படி என்றால்
அப்படி தான்

எழுதியவர் : (11-Feb-18, 11:23 am)
Tanglish : thappu kanakku
பார்வை : 89

மேலே