என்பீஏ NPA

என்பீஏ (NPA)

வங்கிகளில் நீயும் நானும்
-----சேமித்த பணத்தை எல்லாம்
தங்குதடை ஏதும் இன்றி
-----தகிடுதத்தப் பேர்வழி களுக்கு
விடுமிகுதொகை* ஏதும் இன்றி * margin money
-----கடனாகத் தாரை வார்த்து
வட்டியும் முதலும் அழிந்து
-----என்பீஏ என்றே ஆச்சு!

அன்பையே விதையாய் விதைத்து
-----ஆசையாய்ப் பயிரை வளர்த்து
பின்னொரு காலம் தன்னில்
-----அன்பையே அறுவடை செய்ய
எண்ணியே எதிர்பார்த் திருக்கும்
-----தந்தையைத் தாயை மறக்கும்
எண்ணற்ற மகன்கள் மகள்கள்
-----இவர்களுமே என்பீ ஏதான்.

வரிப்பணத்தை வாரி விட்டு
-----வங்கிகளின் என்பீஏவை
மறுமதிப் பீடு செய்ய** ** - recapitaisation
-----மூலதனம் செய்யுது அரசு.
தன்னுறவால் தள்ளப் பட்டு
-----தவிக்கின்ற தந்தை தாயின்
என்பீ ஏக்களை மீட்டுத்
-----தருவதற்கு வழியெதும் உண்டோ?

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (19-Feb-18, 10:24 am)
பார்வை : 64

மேலே