நல்ல மனசின் விலாசம்
எம்ஜிஆர் அதிகம் பயணித்த
சாலைகளில் பயணம்...
முப்பத்தைந்து ஆண்டு கால
நட்புக்குரியவனைச் சந்தித்தபின்...
குளிர் தென்றல்
சென்னையிலும் வீசுகிறது...
குற்றாலத் தென்றலாய்...
நிலவில்லாத வானம்..
சாலைகளில் வெளிச்சம்
பல்லவ சாம்ராஜ்ய ராஜாக்கள்
பார்த்திருக்க மாட்டார்கள்...
தமிழகம் இரண்டாயிரத்து
பதினெட்டில்..
புரவிகள் ஓடா சாலைகளில்
புரவிகளையும்விட
ஓலா கார்
வேகவேகமாய்...
பொன்மாலையில் துவங்கிய
பொழுது பொன்னிரவிலும்
ஜொலிக்கிறது...
வீட்டை நிறைக்க
விளக்கின் ஒளியோ
வாசனை சாம்பிராணி
புகையோ போதும்...
மனசை நிறைக்க
இனிய நட்பின்
இன்ப நினைவுகள் போதும்..
உணர்ந்ததைச் சொல்வதில்
உள்ளமெலாம் உல்லாசம்
இங்குதான் இருக்கிறது
நல்லமனதின் விலாசம்...
👍😀🤷🏾♂