கீழ் காற்று
ஒவ்வொரு முறையும்
நொதித்து போகிறேன்
நுழைக்கும் பார்வையால்.
தீக்குள் நிற்கிறேன்...
தெரிந்தும் நீ
தூண்டிலாகி துவண்டு
சுழல்கிறாய்...உன்
ஈரசிரிப்பில் கலைந்தது
வெளிச்சம் பரவாத
காணிருள் மனக்குட்டை.
ஆழ் மௌனம் பூண்டு
காமத்தின் அமிலம்
நாட்களின் மீது
சொரிந்து பாய்கிறது...
நம் தனிமை
சூடா பூவாய்....
திசை தேடும் காற்றாய்...