புது உறவு, புது மோகம் , ஒரு மாயம்
நேற்றுவரை உன் வாழ்வில்
தேனாய் இனித்தவள் நான்
உன் மனைவி உன்னையே
நம்பி வந்தவள் உன் நிழலில் வாழ்பவள்
இன்று நீ ஏதேதோ சொல்லி
ஒரு கிள்ளு கீரைப்போல் தூக்கியெறிய
பார்க்கிறாய் , புதிய உறவு தரும்
மற்றோருவலுடன்; 'விவாகரத்து'
கோரி நீ முயல்வது தெரியும்
உன்னை உன் மனதை ஒரு முறை
கேட்டுப்பார், நீ செய்வது நியாயமா என்று
அது சொல்லும் 'உன் பார்வையில்
இப்போது கோணல்கள் ஆயிரம்
அதை சரி செய்து மீண்டும் இணைப் பார்'
என்று, அப்போது நான் எப்போதும்
உன்னவள்தான் என்பது புலப்படும்
உன்னை ஆட்டிப்படைக்கும் 'மாயம்'
என்னை நீ நாடி வருவாய் என்ற
நம்பிக்கையில் நான் வாழ்கின்றேன்
'கோவலன், 'உன் 'கண்ணகியாய்