என்னவனுக்கான காத்திருப்பு

நினைத்த நொடியில்
பார்த்திட முடியா நிலையிலும்
நித்தம் தேடுகிறேன்
சில நேரம் நிழலிலும்
பல நேரம் நிஜத்திலும்...
எட்டி பிடிக்கும் நிலையில்
நீ இல்லையென்றாலும்
உன்னுடன் இருந்த நிமிட நினைவுகள்
என்னை தேற்றுகிறது.
இருந்தும்
காத்திருக்கிறேன் என்றோ
வரப்போகும் உன் வருகைக்காக
என்றும் மாறா
உன்னுடனான என் தொலைதூர காதலுடன் !

எழுதியவர் : Ranjeetha (6-Mar-18, 9:58 am)
பார்வை : 131

மேலே