பெண்ணே உன் உரிமைக்கு போராடு
அவர்கள் இருவரும் சகோதரிகள்
இருவரும் தாழ்த்தப்பட்ட இனத்தோர்
படிப்பில் இருவரும் கெட்டி ,
இருவரும் சமஸ்க்ரித மொழியில்
முதுகலை பட்டம் பெற்றவர்கள் ;;
இருவரும் மணமகளுக்கும் அவர்கள்
குடும்ப பெண்டிருக்கும் 'மெஹெந்தி'
கைகளில் வரைவதில் நிபுணர்கள் ;
திருமண நாட்கள் தொடங்கினால்
இருவருக்கும் அவர்கள் வாழும்
இடம் மற்றும் அக்கம் பக்கத்தில்
'ஏராள கிராக்கி', அத்தனை
கலை ஆர்வத்தோடு மெஹெந்தி
வரைவார் இருவரும் அதில் நல்ல
வருமானம்'...........ஆனால் தன்மானம்
கேள்விக்குறி..................
மெஹெந்தி முடிந்தபின்
விருந்து, அதில் உயர் ஜாதி
விருந்தினருக்கு தனி உபசாரம்
தாழ்த்தப்பட்ட பணியாளருக்கு
'காகித கோப்பையில்தான்' எல்லாமே
சாப்பாடு முதல், தேநீர் வரை!
இரு சகோதரிக்கும் அவ்வாறே
விருந்து அளிக்கப்பட்டது
பொறுத்திருந்து பார்த்த சகோதரிகள்
அன்று 'மெஹெந்தி'க்கு பின்
ஒருவர் இவ்வாறு விருந்தளிக்க,
இவ்வளவு நாள் உள் மனதில்
அடக்கி வைத்திருந்த எண்ணங்களை
எரிமலையாய் வெடித்து உமிழ்ந்தனர்,
அவர்கள் இவ்வாறு கூறினார்,
'உங்கள் மணமகளுக்கும்,
மற்றும் உற்றார் உறவினருக்கும்
எங்கள் கை பட்டுதானே மெஹெந்தி'
தீட்டுகிறோம், கைகள் பட, அதற்கு
நீங்கள் என் தீண்டாமை காட்டவில்லை ?
எங்கள் கைகள் பட்டதால் அந்த கைகளை
கொய்துவிடுவதில்லையே ...அதை
அழகுதான் பார்க்கிறீர்கள் .........................
நாங்கள் தொட்டு தீண்டிய அந்த
கைகள் தீண்டாதார் ஸ்பரிசம் பட்டதால்
அதை கிள்ளி எரிவீர்களா என்று கேட்க,
அசந்து போயினர் வந்தவர்கள்
அத்தனை பேரும், அதிர்ச்சியிலிருந்து மீண்டு
தவறை உணர்ந்து, தங்கள் உரிமைக்கு
போராடிய சகோதரிகளை, அந்த
'தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த
'மெஹெந்தி' கலைஞருக்கு வீட்டின்
உள்ளே எல்லோருடனும் விருந்து
உபச்சாரம் நடந்தது ...............
இது நேற்றைய முன் தினம்
குஜராத் மாகாணத்தில் நடந்த
உண்மை சம்பவம்
பெண்கள் தினத்தில்
'தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்கள்
தங்கள் சுய மரியாதை' உரிமை
இரண்டிற்கும் போராடுதல்
உண்மை .....................
தொடரட்டும் இந்த நியாய போராட்டம்
பெண்ணே தொடர்ந்து போராடு
குணத்தால் சிறந்தோர் உயர்குலத்தோர்
அஃதல்லார் தாழ்ந்தோர் ..............