என் தாயின் இழப்பின் ஏமாற்றம்

என் தாயின் இழப்பு...,
என் தந்தைக்கு மட்டும் இல்லை,
எனக்கும் என் உடன்பிறப்புக்கும் உண்டு,
என் தாயின் இழப்பு...,
என் தாயின் உடன்பிறப்பிற்கும், உறவினர்களுக்கும்,
ஒரு நாள் ஏமாற்றமும் கெட்ட நாட்களே தவிர,
எனக்கும் என் தந்தைக்கும், உடன்பிறப்பிற்கும்
தினம் தினம் ஏமாற்றமும் கெட்ட நாட்களே,
தன் தாய் இல்லாமல் ஒரு குழந்தை
இந்த சமூகத்தில் படும் கஷ்டம் அன்பிற்க்காக மட்டும் அல்ல,
அக்குழந்தை மற்ற உறவினர்கள் முன்னிலையில்
தாழ்த்தப்பட்டவர்களாக நிற்கப்படும்,
இதுநாள் வரை அக்குழந்தை ஒவ்வொரு நொடியும்
தன் தாயின் அன்பிற்காக வரும் ஏமாற்றத்தை கடந்து தான்
தன் வாழ்க்கைப் பயணத்தை இன்னும் கடந்துச் செல்கிறது.......
கடந்தும் செல்கிறேன்...........

எழுதியவர் : பாரதி மீனா (20-Mar-18, 7:10 pm)
சேர்த்தது : பாரதி மீனா
பார்வை : 297

மேலே