பாரதி மீனா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாரதி மீனா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 17-Aug-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 297 |
புள்ளி | : 84 |
அம்மா தான் எல்லாம்.....
என் தாயின் இழப்பு...,
என் தந்தைக்கு மட்டும் இல்லை,
எனக்கும் என் உடன்பிறப்புக்கும் உண்டு,
என் தாயின் இழப்பு...,
என் தாயின் உடன்பிறப்பிற்கும், உறவினர்களுக்கும்,
ஒரு நாள் ஏமாற்றமும் கெட்ட நாட்களே தவிர,
எனக்கும் என் தந்தைக்கும், உடன்பிறப்பிற்கும்
தினம் தினம் ஏமாற்றமும் கெட்ட நாட்களே,
தன் தாய் இல்லாமல் ஒரு குழந்தை
இந்த சமூகத்தில் படும் கஷ்டம் அன்பிற்க்காக மட்டும் அல்ல,
அக்குழந்தை மற்ற உறவினர்கள் முன்னிலையில்
தாழ்த்தப்பட்டவர்களாக நிற்கப்படும்,
இதுநாள் வரை அக்குழந்தை
நான் சிறுவயதில் செய்யும் சிறு சிறு தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு
என்னை தூங்கவைக்கும் என் அப்பாவின் தோள் பட்டையும் என் தாய்மடி தான்......
தாய்மடி:
மேகத்தை ஏமாற்றிக் கொண்டு பூமியை வந்தடையும்
மழைத்துளிக்கு பூமி ஒரு தாய்மடி போல,
நானும் என் சந்தோசத்தை ஏமாற்றிக் கொண்டு
தாயின் மடியை வந்தடையும் சுகமும் ஒன்று.....
இந்த தலைப்பில் என் இரண்டாவது கவிதை
அம்மா என்னை விட்டு ஏன் சென்றாய்???
உன் அன்பிற்காக ஏங்குவதற்காகவா???
இல்லை உன்னை என்றும் நினைக்கவேண்டும் என்பதற்காகவா???
என்னை தவிக்கவிட்டதில் உனக்கு அவ்வளவு மகிழ்வா???
நான் ஒவ்வொரு நிமிடம் தவிப்பதை உன்னால் உணர முடிகிறதா???
போதும் நீ இல்ல இந்த வாழ்க்கை.....
இன்பமும் துன்பமும் மாற்றி மாற்றி
இரவு பகல் போன்று வருகிறது.....
இரவில் அவனது உரையாடலில்
நான் வாழ்க்கையாக இருப்பேன்
அதே பகலில் அவனுடைய வாழ்க்கையில்
நான் இருந்தும் இல்லாதபோல் இருப்பேன்
இரவில் கூறியதற்காக மகிழ்வதா????
இல்லை
பகலில் கவலை கொள்வதா???
நேரம் தெரியாமல் திசை மாறி நிட்கிறேன்...
அன்பே !!!!!! என்றும் இரவாக இருக்கவே ஆசை!!!!!!
ஏய் பட்டாம்பூச்சி உன்னை போன்றுதான்
என்னுடைய இந்த வாழ்க்கையும் நாட்களா?? மாதங்களா??
இல்லை வருடங்களா?? தெரியவில்லை.....
ஆனால் பிடித்திருக்கிறது.
மழை துளிகளின் நடுவில் நான்.....
எனக்கோ மழையை ரசிக்க ஆசை ஆனால் முடியவில்லை.....
தெரியவா போகிறது அவனுக்கு....
இந்த மழைத் துளிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் கலந்துக்கின்றது என்று.....
என் வலிகளும் வலிமையும் அதிகம் என்று....
போதவில்லை உன்னை வர்ணிக்க இந்த பிறவி..
நீ உலகை பார்ப்பதற்கு முன் உன்னுடைய அழுகுரலை
நான் கேட்டு ரசித்தேன்..
உன் பிஞ்சு மேனியை தொட்டதும் சிலிர்த்தேன்...
மழலை சிரிப்பிற்காகவும் உனக்கு சேவை செய்யவும்
எல்லா ஜென்மமும் பெண்ணாய் பிறக்க ஆசை...
இது நாள் வரை உன்னுடன் பழகிய
இந்த நாட்களில் உன்னிடத்தில் அனைத்தையும்
கற்றுக்கொண்டேன் ஒன்றை தவிர
உயிருக்கு மேலாக நேசித்தவரை உடனே எப்படி மறப்பது என்பது மட்டும்.......
சவாரிகள் ஓடாவிட்டால் எங்கள் வாழ்க்கையும் நகராது
-இப்படிக்கு உழைப்பாளி-
என் அருகில் இருக்கும் போது,
சிரித்து பேசிய உன் உதடுகள்
நான் அருகில் இ்ல்லாத போது,
என் நினைவுகள்.....
உனக்கு வரவில்லை என்பதே.....
எனக்கு கஷ்டம் தருகிறது.