தடையின்றி ஓடும் பயணம்

மடை தொழிலுக்கு மங்களம் பாடி
உடை முதல் காலணி வரை
உற்றத் துணைக்கும் பெற்ற வரத்திற்கும் ஏற்புடன் வைத்து
விடை பகர்ந்து அவர்கள்
நடை கடந்தப்பின்பு
துடைத்தல் துளக்கல் பெருக்கல் பணி முடித்து
எடை குறைப்பிற்காய் சிறு நடை பயின்று
இடையே காக்கை குருவி தோழமைகளுக்கு படையலிட்டு
கடையாய் என் கடமைக்கு ஆயத்தமாகி
அடைத்த வாயிலை பன்முறை சரிபார்த்து
தடையின்றி ஓடும் ஓடையாய் பயணத்தை தொடர்கிறேன்....

இடையிடையே வரும் சலிப்புகள்
இடைவிடாப் பணியால் உடல் சோர்வுகள்
முடை நாற்றமாய் நெஞ்சை அழுத்தும் சமூக அவலங்கள்
கிடையில் தள்ள முயற்சித்தாலும்
மேடை கண்டதும் ஆடும் பாதமாய்
புடைசூழும் மாணவர் படைகண்டவுடன்
விடைபெற்று ஓடும் தடைகள் யாவையும்!

இனிய காலை வணக்கம்

எழுதியவர் : வை.அமுதா (24-Mar-18, 7:42 pm)
பார்வை : 94

மேலே