பெண்ணே நேற்றுவரை நீ யாரோ

அறிவியல் கூற்றின்
சாரத்தில் என் உயிர்
எங்கோ ?
இந்த உடலில் தான் ஒளிந்திருந்தது..
ஒற்றைச் சிரிப்பில்
உடைத்தெறிந்தாய்
நம்பமுடியவில்லை
பெண்ணே!
நேற்றுவரை நீ யாரோ?
காற்றே நில்
போகாதே!
அவள் கண்கள்
பார்த்து வார்த்தை
வரவில்லை...
வானவில் ஏறி
சாயம் கொணர்ந்து
புது கவிதை
செய்து தருகிறேன்..
தூது போ!
மலரே நில்
மலராதே!
அவள் கடந்து செல்வதற்கு
நாழிகைகள் தூரமில்லை
அவள் சுவாசத்தில்
புது வாசம்
நீ அறிவாய்....
உலகமே நில்
சுற்றாதே!
அவள் என்னைதான்
நோக்குகிறாள் காலங்கள் தீர்ந்துவிடபோகின்றது...
விழித்து பார்த்தேன் விடிந்துவிட்டது
அவளும் அவ்வளவும்
கனவு...
இன்னும் கூட நம்பமுடியவில்லை
பெண்ணே!
இப்பொழுதும் நீ யாரோதான்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (25-Mar-18, 11:34 pm)
பார்வை : 270

மேலே