விரும்பாத கோலம்
தர்மம் கேட்பவரின் நிலையில் வேண்டுதல்
இறைவா
உனது படைப்பில் ஒரு நாள் என்பது ஒரே நாள்
எனது வாழ்வில் மூன்று வேலைகள்
அதிலும் கிடைப்பது ஒருவேலை சோறு
அடுத்த வேலை வேண்டும் எடுத்துவைத்தால்
இருப்பது இல்லை அது அதேநிலையில்
திருடவும் மனம் இல்லை
என் மானம் மனக்கண்முன் நிற்கின்றது
அஃதோ கொண்டேன் இக்கோலம்
விரும்பியேற்கவில்லை எனினும் அவிழ்த்துவிட முடியவில்லை
உன்னிடம் ஏந்திய கைகளை குறுக்குவதற்குள்
வெளியே தள்ளப்பட்டு நின்றேன் பிச்சைக்காரனாய்
உள்ளே நீ இருந்தும் பல உருவங்களை வெளியே காண்கிறேன் தர்மம் வழங்கிடும்போது