தன்மாற்றம்
வெளிவெளி பெருவெளி காரிருள் கறுவெளி
பேர் அளியாற்றல் சிவமதுவே...
பரவெளி யதனில் பார்வதி இயக்கமாய்
அர்த்த நாரியாய் சுத்தவெளி…!
சிவம் சிவகாமி யென்றாகி உவந்திட
கவின்மிகு காந்தமு(னு)ம் தோன்றியதே....
காந்தமும் இல்லா காமியும் இல்லா
ஏகாந்தமும் இறைநிலைக்கு இருக்கிறதே..!
அணுவணு பரமணு பரமனின் உயிரணு
பருவென உருவங்கள் எடுத்தனவே...
பரமணுக்கள் சீர் பதத்தினில் கலந்திட
கரமைந்தன் பார் தோன்றினனே…!
ஞானப் பழம்பெற மோனத் தெருவினில்
காந்தம் (ன்) பிரபஞ்சத்தை சுற்றிடுதே...
தன்னை உணர்ந்து தன்னியக்கம் உணர்ந்து
ஐங்கரம்(ன்) பழத்தைகைப் பற்றியதே…!
பரமணு சக்தி காந்தமும் பூதமும்
யாவும் கலந்தது பிரபஞ்சமே...
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்
என்னிலும் இருப்பது அதுமட்டுமே..!
படைத்தான் இறைவன் என்பது வேதம்
எதைக்கொண்டு படைத்தான் பதிலேது...?
தன்னை உணர்ந்தால் தன்னியக்கம் உணர்ந்தால்
தன்மாற்றம் உணர்ந்தால் மறுபிறப்பேது…?